அடுத்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை?

அடுத்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை?


அடுத்த இரண்டு மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களில் பருவமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வெப்பநிலையும் இயல்பை விட குறைவாக பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக கோவை, நீலகிரி ,தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னையின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் 10 சென்டிமீட்டர் மழையும், சின்னக்கல்லாரில் 7 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கூடலூரில் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive