இன்றுடன் முடிகிறது இன்ஜி., கவுன்சிலிங்

இன்றுடன் முடிகிறது இன்ஜி., கவுன்சிலிங்

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்றுடன் முடிகிறது.தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

தொழிற்கல்வி, விளையாட்டு பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் துணை கவுன்சிலிங் பிரிவினருக்கு, நேரடி கவுன்சிலிங்; பொது பிரிவினருக்கு, ஆன்லைன் கவுன்சிலிங்கும் நடத்தப்பட்டுள்ளது.ஜூலை, 3ல் துவங்கிய ஆன்லைன் கவுன்சிலிங், இரு தினங்களுக்கு முன் முடிந்தது.

இதையடுத்து, 28ம் தேதி முதல், துணை கவுன்சிலிங் துவங்கியுள்ளது. இன்றுடன் துணை கவுன்சிலிங்கும் முடிகிறது.ஆகஸ்ட் முதல் வாரத்தில், தனியார் கல்லுாரிகள், நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க, அவகாசம் வழங்கப்படும்.ஆக., 7ல், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை முடிவுக்கு வரும் என, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.





Related Posts:

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

3105873

Code