சமூக வலைத்தளங்கள் மூலம் கடனாளிகளை தேடும்வங்கிகள்

சமூக வலைத்தளங்கள் மூலம் கடனாளிகளை தேடும்வங்கிகள்



கல்விக்கடனைத் திருப்ப செலுத்தாதவர்களை அவர்களின் சமூக வலைத்தளங்கள் மூலம் வங்கிகள் கண்டுபிடித்து வருவது தெரியவந்துள்ளது. 


வங்கிகளில் கல்விக் கடன் வாங்கி திரும்ப செலுத்தாதவர்களை கண்டுபிடிக்க வங்கிகள் ஒரு புதிய முறையை கையாண்டு வருகின்றனர். அதன்படி வங்கி அதிகாரிகள் ‘டெவலப்பர் அப்ளிகேஷன் புரோகிராம் இண்டர்ஃபேஸ்’ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தத் தளத்தின் உதவியுடன் வங்கி கடனை செலுத்தாதவரின் பெயர், கல்வித் தகுதி மற்றும் அவரின் வேலை விவரம் ஆகியவை வைத்து சமூக வலைத்தளங்களில் தேடி வருகின்றனர். அதன்பின்னர் இந்தக் கணக்கை வைத்து கல்விக் கடனை திருப்ப செலுத்தாதவர்களை வங்கி தொடர்பு கொள்கிறது.

முன்னதாக கல்விக் கடன் திரும்ப செலுத்தாதவர்களை வங்கிகள் அவர்கள் கொடுத்துள்ள மின்னஞல் கணக்கு மற்றும் தொலைபேசி எண் ஆகியவை வைத்து தொடர்பு கொண்டு வந்தது. எனினும் வங்கி கடன் வாங்கியவர்கள் இதிலிருந்து தப்பிக்க தங்களின் தொலைபேசி எண்ணை மாற்றி வந்தனர். அத்துடன் தங்களின் வீட்டையும் மாற்றி வந்தனர். எனவே அவர்களை கண்டறியவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்தச் சூழலில் வங்கிகள் இந்தப் புதிய முறையை உபயோகித்து வருகின்றன.

பொதுவாக ஒருவர் ஏதாவது ஒரு வலைத்தளத்திற்கு சென்று ஆராயும் போது அந்தத் தளம் ‘உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதவிடுங்கள்’ என அறிவுறுத்தும். அது போன்று பதிவிடப்படும் மின்னஞ்சல் முகவரி மூலம் உரியவரின் அடிப்படை தகவல்கள், ஃபேஸ்புக் கணக்கு விவரம் உள்ளிட்ட பல அத்தளத்திற்குள் பதிவாகும். அதனைக் கொண்டு வங்கி அதிகாரிகள் தங்களின் கடனைத் திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியலை இண்டர்பேஸ் ஆய்வின் மூலம் கண்டறிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive