தகுதிக்குத்தான் வேலை; பாடப்பிரிவுக்காக அல்ல
சிலருக்கு வேலை கிடைத்து, சிலருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், வேலை கிடைத்தவர்களுக்கு உள்ள திறன்கள் வேலை கிடைக்காதவர்களிடம் இல்லை என்றுதானே பொருள்! ஆகவே, மாணவர்கள் &'வேலை வாய்ப்பு இல்லை' என்று எண்ணிக்கொண்டிருக்காமல், வேலைக்கு தேவையான தகுதியும், திறமையும் எவை என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.இன்று பெரும்பாலான மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டு, அந்த படிப்பை மட்டுமே தேர்வு செய்கின்றனர். ஆனால், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், கெமிக்கல் என அனைத்து துறைகளிலும் தகுதியானவர்களை தேடி, தொழில்நிறுவனங்கள் கல்லூரிகளுக்கு தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன.கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை தேர்வு செய்தால் மட்டும் வேலை கிடைத்துவிடாது. அதில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அதற்கு ஏற்ப திறன்களை வளர்த்துக்கொண்டால் தான் வேலை கிடைக்கும். இது அனைத்து துறை படிப்புகளுக்கும் பொருந்தும்.அதாவது, கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வேலை கிடைக்காதவர்களும் உள்ளனர். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்து சிறந்த வேலை வாய்ப்பை பெற்றவர்களும் உள்ளனர்.
ஏனெனில், எந்த தொழில் நிறுவனமும், படிப்பை மட்டும் பார்த்து வேலை தருவதில்லை. ஆகவே, எந்த படிப்பாக இருந்தாலும், அத்துறை சார்ந்த தகுதியையும், திறன்களையும் வளர்த்துக்கொள்வதில் மாணவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். தவிர, ஒவ்வொரு மாணவரும் 'நான் வாழ்க்கையில் முன்னேறி சிறந்த இடத்தை பிடிப்பேன்' என்ற குறிக்கோளுடன் செயல்பட்டால் போதும் அவர்களால் நிச்சயம் சாதிக்க முடியும். இதே எண்ணத்துடன் செயல்படும் நல்ல நண்பர்களை தங்களுடன் இணைத்துக்கொண்டு, பாடம் சம்பந்தப்பட்ட, கல்வி சம்பந்தப்பட்ட அம்சங்களை அவ்வப்போது கலந்துரையாடி, இணைந்து படித்தார்கள் என்றால் அந்த குழுவில் உள்ள அனைவருமே விரைவில் வெற்றி பெறுவர்.உதவித்தொகைமாணவர்கள் திறமையை வளர்த்துக்கொள்வதற்கும், சாதிப்பதற்கும் ஏதுவான சூழலை அமைத்து தருவது தான் கல்லூரிகளின் பிரதான கடமை.
எங்கள் கல்லூரியை பொருத்தவரை, சாப்ட் ஸ்கில்ஸ் மற்றும் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் சார்ந்த பயிற்சியை அனைத்து மாணவர்களுக்கும் வழங்குகிறோம். கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் எங்கள் கல்வி நிறுவனங்களில் நன்கொடை பெறுவதில்லை. மாறாக, உதவித்தொகைகளை சிறந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்குகிறோம்.ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளையின் கீழ், சென்னையை அடுத்த வேப்பம்பட்டுவில் பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்க்கை பெறும் சிறந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கிறோம்.
அதாவது, 160 கட்-ஆப் மதிப்பெண்களுக்கும் மேல் பெற்ற மாணவர்கள் கலந்தாய்வு வாயிலாக அரசு இடஒதுக்கீட்டில் சேர்ந்தாலும் சரி, நிர்வாக ஒதுக்கீட்டில் எங்கள் கல்லூரியில் சேர்க்கை பெற்றாலும் சரி எந்தவித கல்விக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. 150 லிருந்து 160 கட்-ஆப் மதிப்பெண்களுக்குள் பெற்ற மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் 50 சதவீத விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல், இன்ஜினியரிங் முதுநிலை பட்டப்படிப்பிலும், பாலிடெக்னிக் படிப்பிலும் கல்விக்கட்டணத்தில் சலுகை வழங்குகிறோம்.-ஆர்.நாராயணசாமி, தலைவர், ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளை, சென்னை