ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியீடு!
வங்கி அலுலவக உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஆள் சேர்ப்புக்கான தேர்வுகளை ஐபிபிஎஸ் என்னும் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. அதன்படி, வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி பிஓ 2019 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது.
இத்தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூன் 18ல் தொடங்கி ஜூலை 4ல் முடிந்தது. இதனிடையே தற்போது இத்தேர்வுக்கான அட்மிட் கார்டு ஐபிபிஎஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் https://ibpsonline.ibps.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுக்கான அட்மிட் கார்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://ibpsonline.ibps.in/rrbb8oajun19/clopea_jul19/login.php?appid=20bfa3302df2c394e0e3d274258426b4&_ga=2.36007139.27024149.1564213075-1674138586.1563253478
முக்கியத் தேதிகள்
ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி அலுவலக உதவியாளர் தேர்வுக்கான முதல் நிலைத் தேர்வு ஆகஸ்ட் 17, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும். மெயின் தேர்வு செப்டம்பர் 29, 2019 அன்று நடைபெறும்