நாளை சூரிய கிரகணம்- நம்மை பாதுகாத்து கொள்ள சில வழிமுறைகள்!
2019க்கான சூரிய கிரகணம் நாளை ஏற்படுகிறது. இந்த கிரகணம் 4 நிமிடம் 33 வினாடிகள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019க்கான சூரிய கிரகணம் நாளை ஏற்படுகிறது. இந்த கிரகணம் நியூசிலாந்து கடற்கரையோரம் ஆரம்பித்து சிலி, அர்ஜன்டைனா நாடுகள் முழுவதும் தெரியும். இந்தியாவில் இந்த கிரகணத்தை காண இயலாது.இந்தியாவில் கிரகணம் தெரியாது என்ற போதிலும், மேற்குறிபிட்ட நாடுகளில், இந்திய நேரப்படி, இரவு 10.17 மணிக்கு கிரகணம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு வரும்போது ஏற்படுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் போது உணவு உண்ணக்கூடாது என்றும் தண்ணீர் அருந்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காந்த அலைகள் மற்றும் புறஊதாகதிர்கள் நம்மை தாக்ககூடும் என இதற்கு காரணம் சொல்லப்படுகிறது. கிரகணம் ஆரம்பிப்பதற்கு முன்னரே உணவு உட்கொள்ள வேண்டும் மற்றும் போதுமான தண்ணீர் அருந்திவிட வேண்டும்.
சூரிய கிரகணத்தை வெறும் கண்காளால் பார்க்க கூடாது. காரணம் மற்ற நாட்களை விட கிரகணத்தன்று சூரியனின் தாக்கம் அதிகரித்து காணப்படும், இதனால் கண் பாதிப்பு பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.