பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஒரு மாதத்துக்குள் பொருத்த வேண்டும்
தமிழக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து தனியார் பள்ளி பஸ்கள், வேன்கள் என்று அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 22-ந்தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களும், ஜி.பி.எஸ். கருவியும் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களும் ஜி.பி.எஸ். கருவிகளும்எல்லா நேரங்களிலும் சீராக இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கருவிகளின் மூலம் பள்ளி வாகனங்களின் போக்குவரத்தை கண்காணிக்க அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்திவிட்டு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.