மத்திய அரசுப் பணிகளில் ஓபிசி வகுப்பினருக்கான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை: மத்திய அமைச்சர் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, July 18, 2019

மத்திய அரசுப் பணிகளில் ஓபிசி வகுப்பினருக்கான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை: மத்திய அமைச்சர்

மத்திய அரசுப் பணிகளில் ஓபிசி வகுப்பினருக்கான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை: மத்திய அமைச்சர்


மத்திய அரசுப் பணிகளில், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி வகுப்பினருக்கான நிரப்பப்பட வேண்டிய காலிப்பணியிடங்கள் குறித்த தகவலை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், எழுத்துப்பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு இன்று (புதன்கிழமை) மக்களவையில் பதில் அளித்தார். 


அவர் அளித்த தகவல்களின்படி, எஸ்சி மற்றும் எஸ்டி வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சதவீதத்தைக் காட்டிலும் அந்த வகுப்பினர் கூடுதல் இடங்களில் இருக்கின்றனர். அதேசமயம், இதர பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சதவீதம் படிப்படியாக நிரம்பி வருவதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசுப் பணிகளில் பணிபுரியும் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் சதவீதம்: 

 இதர பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சதவீதம் ஜனவரி 1, 2012 நிலவரம் ஜனவரி 1, 2016 நிலவரம் 27 சதவீதம் 16.55 சதவீதம் 21.57 சதவீதம் மத்திய அரசுப் பணிகளில் பணிபுரியும் எஸ்சி வகுப்பினர் சதவீதம்: எஸ்சி வகுப்பினருக்கா க ஒதுக்கப்பட்டுள்ள சதவீதம் ஜனவரி 1, 2016 நிலவரம் 15 சதவீதம் 17.49 சதவீதம் மத்திய அரசுப் பணிகளில் பணிபுரியும் எஸ்டி வகுப்பினர் சதவீதம்: எஸ்டி வகுப்பினருக்கா க ஒதுக்கப்பட்டுள்ள சதவீதம் ஜனவரி 1, 2016 நிலவரம் 7.5 சதவீதம் 8.47 சதவீதம் தபால், பாதுகாப்பு உற்பத்தி, நிதிச் சேவை, அணு சக்தி, பாதுகாப்பு, வருவாய், ரயில்வே, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரம், மனித வள மேம்பாடு மற்றும் உள்துறை விவகாரம் ஆகிய 10 துறைகளில் தான் 90 சதவீத மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 

இந்த துறைகள் அளித்துள்ள தகவல்களின்படி, 2012 நிலவரப்படி நிரப்பப்பட வேண்டிய காலிப்பணியிடங்கள் ஜனவரி 1, 2017 நிலவரப்படி நிரப்பபட வேண்டிய காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய மொத்த காலிப்பணியிடங்கள் 92,589 28,713 எஸ்சி வகுப்பு 29,198 8,223 எஸ்டி வகுப்பு 22,829 6,955 இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு 40,562 13,535 இந்த 10 துறைகளில் 5 துறைகள் கூடுதலாக தெரிவித்த தகவலின்படி, டிசம்பர் 31, 2017-ன் நிலவரப்படி மூன்று வகுப்பினருக்கான 21,499 மொத்த காலிப்பணியிடங்களில் 12, 334 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இதன்மூலம், இந்த 5 துறைகளில் ஜனவரி 1, 2018-ன் படி நிரப்பப்படவேண்டிய காலிப்பணியிடங்கள் மொத்தம் 9,165 ஆக உள்ளன.

Post Top Ad