சிறுவனின் கை பட்டவுடன் பல்ப் எரியும் அதிசயம்!
சிறுவனின் கை பட்டவுடன் அதிசியமாக பல்ப் ஒன்று தானாக ஒளிர்கின்றது. இது தெலுங்கான மாநிலத்தில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த அதிசியத்தை ஏராளமானோர் கண்டு வருகின்றனர்.
மின்சாரம் இல்லாமல், அல்லது பேட்டரியின் மின்புலம் இல்லாமல், எல்இடி, சிஎப்எல் உள்ளிட்ட எந்தவிதமான பல்புகளும் எரியாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை
ஆனால், இந்த சிறுவனின் கை பட்டால் பல்புகள் தானாக எரிகின்றன இது பெரும்பாலானோருக்கு தெரியாத உண்மையாகும்.
சிறுவர்களின் உலில் பல்ப் எரிகிறது:
தெலங்கானா ஆதிலாபாத் மாவட்டம் சிரசன்னா ராம் நகரை சேர்ந்தவர் ஷேக் சாந்த் பாஷா. இவர் கடந்த வாரம் தனது வீட்டில் இருந்த லைட் பீஸ் போனதால் கடைக்கு சென்று புதிய பல்ப்பை வாங்கி வந்தார். அந்த பல்பை வைத்து வீட்டில் இருந்த அவரது மகனும், மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
உடலில் பட்டவுடன் எரிகிறது:
அவர்கள் கையில் வைத்திருந்தபோது மின்சாரம் இல்லாமல் பல்ப் எரிவதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இதையடுத்து வேறு ஒரு பல்பை வாங்கி வந்து சோதித்தபோது அந்த பல்பு அவர்கள் உடலில் பட்டவுடன் எரியத் தொடங்கியது.
சிறுவர்களின் மீது சோதனை:
இதேபோன்று ஷேக் சாந்த் பாஷா உடலில் வைத்தாலும் லைட் எரிந்தது. இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் பரவியதையடுத்து கிராமத்தில் உள்ள ஒவ்வொருவராக புதிய பல்புகளை வாங்கி வந்து அந்த சிறுவர்கள் மீது வைத்து சோதனை செய்து வருகின்றனர்.
மின்சாரம் இல்லாமல், அல்லது பேட்டரியின் மின்புலம் இல்லாமல், எல்இடி, சிஎப்எல் உள்ளிட்ட எந்தவிதமான பல்புகளும் எரியாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை
ஆனால், இந்த சிறுவனின் கை பட்டால் பல்புகள் தானாக எரிகின்றன இது பெரும்பாலானோருக்கு தெரியாத உண்மையாகும்.
கேரளாவில் நடந்த சம்பவம்:
இதேபோல், கேரள மாநிலம், ஆழப்புழா அருகே முகம்மா கிராமத்தைச் சேர்ந்தவர் நிஜார். இவரின் 7-ம் வகுப்பு மகன் அபு தாஹிர். சமீபத்தில் வீட்டில் எல்இடி பல்பு பியூஸ் ஆகிவிட்டதால், புதிதாக ரூ.450க்கு நிஜார் பல்பு ஒன்றை வாங்கி வந்துள்ளார்.
வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த தனது மகன் அபுதாஹிரை அழைத்து இந்த பல்வை வீட்டுக்குள் வைத்துவிட்டு வா என்று கூறி பல்பை நிஜார் கொடுத்தார். என்ன அதிசயம், சிறுவன் அபுதாஹிர் கைபட்டவுடன் பல்பு எரியத் தொடங்கி இருக்கிறது.
இதைக் கண்ட நிஜார் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
ஆய்வாளர் கருத்து:
இயற்பியல் வல்லுநர் ஜோஷி கே.கே. குரியகோஸ் சிறுவன் அபுதாஹிர் குறித்து கூறுகையில், ‘ இயற்கையாக யாருக்கு அதிகமாக வியர்க்குமோ அவர்களுக்கு உடலில் உப்புச்சத்து அதிகமாக இருக்கும். அவர்கள் உடலில் உப்பின் அளவு அதிகரிக்கும் போது, உடலில் மின்னூட்டம் ஏற்படும். அப்போது உடலின் தோல் பகுதி மின்னூட்டம் பெற்று மின்சாரம் பாயத் தொடங்கும். அதனால்தான் தாஹிர் கை பட்டவுடன் பல்பு எரியத் தொடங்கி இருக்கிறது.
அனைத்துவகையான பல்புகளும் தாஹிர் உடலில்பட்டவுடன் எரிந்துவிடாது. ரீசார்ஜபில் பல்புகள் மட்டுமே எரியும். ரீசார்ஜ் பல்பின் ஒரு முனையில் வயரையும், மறுமுனை வயரை தாஹிர் உடலில் வைத்தால் பல்பு எரியும். இயற்கையாகவே இதுபோன்ற உடலில் மின்னூட்டம் அதிகமாகஇருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் கூற்று:
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் ஒவ்வொருவரின் உடலிலும் மின்சாரம் என்பது இயற்கையாகவே இருக்கும். உடலில் ஈரப்பதம் இல்லாத நேரத்தில் அவை தெரியாது. ஈரப்பதத்துடன் யாராக இருந்தாலும் மின்சாரம் இல்லாமல் தொட்டால் பல்ப் எரியும் என தெரிவித்துள்ளனர்.