ஒரு நாளைக்கு 10gb அதிவேக இலவச 4g data

ஒரு நாளைக்கு 10gb அதிவேக இலவச 4g data


தொலைத்தொடர்புதுறையில் ஜியோநிறுவனம்ஏற்படுத்திய மாபெரும் புரட்சியாராலும் மறக்க முடியாத ஓன்று. ஜியோவின் வருகையினால்பல்வேறு நிறுவனங்கள் ஆட்டம்காண்கின்றனர். ஏற்கனவே பலநிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டநிலையில் மீதமுள்ள நிறுவனங்கள்தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைக்க பல்வேறு சலுகைகளைவழங்கிவருகிறது. அந்த வகையில்BSNL நிறுவனம் ஜியோநிறுவனத்திற்கு போட்டியாகஇரண்டு அட்டகாசமானசலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது 96 ரூபாய்க்கு ரீசார்ஜ்செய்வதன் மூலம் ஒருநாளைக்கு 10 GB அளவிலான 4G டேட்டாவைவழங்குகிறது BSNL நிறுவனம். இதன் வேலிடிட்டி 28 நாட்கள்மட்டுமேஅதேபோல் 236 க்கு ரீசார்ஜ்செய்தால் ஒருநாளைக்கு 10 GB அளவிலான 4G டேட்டாவை 84 நாட்களுக்கு பெறமுடியும்இந்தசலுகை குறிப்பிட்ட நாட்களுக்குமட்டுமே என தெரிவித்துள்ளது BSNL நிறுவனம். ஆனால், இதில்ஒருசிக்கல் என்னவென்றால் இந்ததிட்டத்தில் ரீசார்ஜ் செய்தால்இலவச அழைப்பு மற்றும் இலவசSMS எதுவும் கிடையாது என்பதுகுறிப்பிடத்தக்கது

பின்லாந்தில் பாடம் கற்கும் அமைச்சர் செங்கோட்டையன் 



பின்லாந்தில் பாடம் கற்கும் அமைச்சர் செங்கோட்டையன் 



தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருபவர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். இவர் 7 நாள் பயணமாக பின்லாந்திற்கு சென்றுள்ளார். இவர் அங்குள்ள மழலையர் பள்ளி ஒன்றை பார்வையிட்டு அவர்களின் கல்வி முறை பற்றி அதிகாரிகளுடன் கேட்டு அறிந்தார். 

மழலையர் பள்ளியில் கற்றுத்தரப்படும் கல்வி முறை, கற்றல் உபகரணங்கள், மாணவர்களின் கற்கும் திறன் உள்ளிட்டவை குறித்து லிலுன்லாட்டி மழலையர் பள்ளி முதல்வரிடம் அமைச்சர் செங்கோட்டையன் கேட்டறிந்தார்.

தமிழகம் முழுவதும் 10 மாணவர்கள் உள்ள பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றம்:கூடுதல் ஆசிரியர்கள் தூக்கியடிப்பு,..பணியிட மாறுதல் வழங்குவதில் குளறுபடி,.. கல்வித்தரம் குறையும்

தமிழகம் முழுவதும் 10 மாணவர்கள் உள்ள பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றம்:கூடுதல் ஆசிரியர்கள் தூக்கியடிப்பு,..பணியிட மாறுதல் வழங்குவதில் குளறுபடி,.. கல்வித்தரம் குறையும்

தமிழகத்தில் 38 ஆயிரம் அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. * இவற்றில் 2.30 லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். * மாணவர்கள் சேராமல் உள்ள பள்ளிகள் நூலகமாக மாற்றப்படுகிறது. * 46 பள்ளிகள் முதல்கட்டமாக நூலகங்களாக மாற்றப்பட்டுள்ளது. * 4 மாவட்டங்களில் 2 ஆசிரியர்கள் உள்ள இடங்களில் ஒரு ஆசிரியர் அதிரடியாக மாற்றப்பட்டார். தமிழகம் முழுவதும் 10 மாணவர்களோ அல்லது அதற்குகீழான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் நேற்று முதல் தொடங்கின. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதல் ஆசிரியர்கள் நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 38 ஆயிரம் அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம், ஒன்றிய அளவில் பிரிக்கப்பட்டு அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 3 கி.மீ ஒரு பள்ளி என்கிற அளவுக்கு, தமிழகத்தில் பள்ளிகள் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2.30 லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் நிதி அயோக் அறிவுறுத்தல்படி மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் பரவிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் சேராமல் உள்ள பள்ளிகளை நூலகமாக மாற்றப்படுகிறது. அந்த பள்ளிகள் மூடப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறி வந்தார். மாணவர்கள் இல்லாத 46 பள்ளிகள் முதல்கட்டமாக நூலகங்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையிலும், இதுதொடர்பான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய கல்விக்கொள்கையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதால், இதை திரும்ப பெற வேண்டும் என்று நடிகர் சூர்யா குரல் கொடுத்தார். தமிழகத்தில் எதிர்கட்சிகள் ஒருசேர புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதவிர கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மாணவர்கள் குறைவாக உள்ள அரசுப்பள்ளிகள் மூடப்படாது என்று அரசு அறிவித்து வந்த நிலையில், அதற்கான முதல்கட்ட நடவடிக்கையை நேற்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 1,300 பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவற்றில் 10 மாணவர்கள், அதற்குகீழ் உள்ள மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஓராசிரியர்கள் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளது. இதற்காக 10 மாணவர்கள், அதற்குகீழ் மாணவர்கள் உள்ள பள்ளிகள் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் உள்ளது போன்ற பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்குவது கடினம், அதனால் அரசுப்பள்ளிகளை மூடக்கூடாது என்று கல்வியாளர்கள் கூறி வரும் நிலையில் இந்த பட்டியல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

10 பேர் அல்லது அதற்கு குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் இதுவரை 2 ஆசிரியர்கள் பணியாற்றும் ஈராசிரியர் பள்ளிகளாக செயல்பட்டு வந்தன. இந்நிலையில் குறிப்பிட்ட உத்தரவால் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றும், பள்ளிகளில் அதிக பணி அனுபவம் உள்ள ஆசிரியரை அதே பள்ளியில் தொடர வைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணி அனுபவம் குறைவாக உள்ள ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, பணியிடமாற்றம் செய்யப்பட உள்ள ஆசிரியர்களை அழைத்து பேசியுள்ளனர். பின்னர் நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் 2 ஆசிரியர்கள் உள்ள இடங்களில் ஒரு ஆசிரியர் அதிரடியாக மாற்றப்பட்டார். இதற்கான கவுன்சலிங் நேற்று 4 மாவட்டங்களிலும் நடந்தது. ஏற்கனவே ஒன்றிய அடிப்படையிலும், அதற்கடுத்தபடியாக மாவட்ட அடிப்படையிலும் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு பணி அனுபவம் அடிப்படையில் டிரான்ஸ்பர், பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் தற்போது மாற்றப்படும் ஓராசிரியர் அதே ஒன்றியத்துக்குள் பணியிடமாற்றம் செய்யாமல் வேறு ஒன்றியத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறு மாற்றுவதால், குறிப்பிட்ட ஆசிரியர்களின் சீனியாரிட்டி பாதிக்கப்படும். அதனால் அவர்கள் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்காக காலம் அதிகரிக்கும். சீனியாரிட்டி பட்டியலில் குளறுபடி ஏற்படும் என்பதால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆசிரியர்களின் சீனியாரிட்டி பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால் மற்ெறாருபுறம், கல்வித்தரம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இரண்டு ஆசிரியர்கள் உள்ள பள்ளியில் ஒரு ஆசிரியர், விடுப்பு எடுக்கும்பட்சத்தில் மற்றொரு ஆசிரியர் கட்டாயம் பள்ளிக்கு வந்து வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவற்றை ஓராசிரியர்கள் பள்ளிகளாக மாற்றும்பட்சத்தில், குறிப்பிட்ட ஆசிரியர் அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பிட்ட ஆசிரியருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் பள்ளிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டால் பள்ளிக்கு விடுமுறைவிட வேண்டிய சூழல் ஏற்படும். வேறு பள்ளியிலிருந்து மாற்று ஆசிரியர் வந்தாலும், அந்த ஆசிரியரால் விடுமுறையில் சென்ற ஆசிரியர் போல் அல்லது அதன் தொடர்ச்சியை பாடமாக எடுக்க முடியாது. பள்ளியை திறந்து மூடுவதற்கு மட்டுமே அந்த ஆசிரியர் பயன்படுவார். ஏற்கனவே அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தற்போதை நடவடிக்கையால் கல்வித்தரம் மேலும் குறையும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்! ஆண்டுக்கு 10000 ரூபாய்

டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்! ஆண்டுக்கு 10000 ரூபாய்  



பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. பொருளாதாரச் சிக்கலினால் உயர்கல்வி கற்பது தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கென சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தை நடப்பு ஆண்டில் அறிவித்துள்ளது மத்திய அரசு. அதன்படி பிளஸ்-2 முடித்துவிட்டு தற்போது பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெற தகுதியானவர்கள். பிளஸ்-2 தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ்-2வை பள்ளியில் நேரடியாக முடித்திருக்க வேண்டும். தனித்தேர்வராகவோ, தொலைநிலையிலோ படித்தவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. நடப்புக் கல்வி ஆண்டில், யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைகளில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் படித்துக் கொண்டிருக்க வேண்டும். டிப்ளமோ படிப்பவர்களும், தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் படிப்பவர்களும் இந்த உதவித்தொகையை பெற இயலாது.

நாடு முழுவதும் மொத்தம் 82 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் மாணவிகளுக்கு வழங்கப்படும். பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் உதவித்தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதன்படி தமிழ்நாட்டிற்கு மொத்தம் 4883 மாணவர்களுக்கும், புதுச்சேரிக்கு 78 பேருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும். உதவித்தொகையானது ஆண்டுக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின்படி, ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். உதவித்தொகை பெற விரும்பும் மாணவரின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதற்கான சான்று, ஆதார் எண், மாணவரின் பெயரில் உள்ள வங்கிக்கணக்கு எண் ஆகிய தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு உதவித்தொகை பெற்றவர்கள் இந்த ஆண்டு புதுப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு பட்டப்படிப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 75 சதவீத வருகைப்பதிவு இருத்தல் அவசியம். ராகிங் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டிருத்தல் கூடாது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.10.2019. கூடுதல் விவரங்களுக்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். விண்ணப்பிப்பது தொடர்பான உதவிக்கு 0120- 6619540 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் (அல்லது) helpdesk@nsp.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ள வேண்டும்' 'நாசா' செல்லும் மதுரை மாணவி அறிவுரை

'மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ள வேண்டும்' 'நாசா' செல்லும் மதுரை மாணவி அறிவுரை

மதுரை, அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம் செல்லும் வாய்ப்பை இந்திய அளவில் பெற்ற மூவரில் ஒருவரான மதுரை மாணவி தான்யா தஸ்னிம், 'மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ள வேண்டும்' என்றார்.'கோ 4 குரு' என்னும் அமைப்பு இந்திய அளவில் சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியை இணையதளம் மூலம் நடத்துகிறது. வெற்றி பெறுவோரை 'நாசா' விண்வெளி மையத்துக்கு அழைத்துச் செல்லும். நடப்பாண்டிற்கான போட்டியில் 11 ஆயிரத்து 700 பேர் பங்கேற்றனர். முடிவில் மூவர் தேர்வு செய்யப்பட்டனர்.அதில் மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த தான்யா தஸ்னிம் 15, என்ற பத்தாம் வகுப்பு மாணவியும் ஒருவர். இவரது தந்தை ஜாபர் உசேன் டீக்கடை வைத்துள்ளார். தாயார் சிக்கந்தர் ஆசிரியை. தான்யா தஸ்னிம் கூறியதாவது:சிறு வயதிலிருந்தே அறிவியல் மீது அதீத காதல் உண்டு. 5ம் வகுப்பிலேயே எனது கதாநாயகனாக அப்துல்கலாமை தேர்ந்தெடுத்தேன். புத்தகங்கள் மூலம் அவரை ஆழமாக படித்தேன். இதனால் விண்வெளி அறிவியல் மீது ஈடுபாடு ஏற்பட்டது. 'கோ 4 குரு' அமைப்பு நடத்திய போட்டியில் பங்கேற்று 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இதில் எல்லையற்ற மகிழ்ச்சி.அக்., 1ல் துவங்கும் இப்பயணம் 10 நாள் கொண்டது. முதல் 3 நாட்கள் 'நாசா' விண்வெளி மையத்தில் இருப்பேன். அப்போது அங்குள்ள நடைமுறைகளை விளக்குவர். விண்வெளி தொடர்பான உபகரணங்களை நேரில் பார்வையிட முடியும். வான்இயற்பியல் படித்து விண்வெளியில் பறப்பதே என் கனவு. அது நனவாக இப்பயணம் உதவி புரியும். இளம் வயதிலேயே என் தேடலை விரிவுபடுத்தினேன். மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ளிவிட்டு படிப்பிலும், உலக அறிவை பெறுவதிலும் கவனம் செலுத்தினால் எட்டா உயரத்தையும் எட்டிப்பிடிக்கலாம், என்றார்

1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்!

1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்!



சி.பி.எஸ்.இ மாணவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு இனி ஆண்டுதோறும் 1முதல் 12ஆம் வகுப்பு வரை - இனி ஆண்டுதோறும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.தேசிய கல்வித்தரத்திற்கு ஏற்ப இந்த பாடத்திட்டம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு என்று பரவும் தகவல் உண்மையில்லை - வருமான வரித்துறை.

வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு என்று பரவும் தகவல் உண்மையில்லை - வருமான வரித்துறை.



வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையோடு ( 31.08.2019 ) முடியவுள்ள நிலையில்,  மேலும் நீட்டிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல் உண்மையில்லை என்று வருமான வரித்துறை விளக்கமளிதுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு என்று பரவும் தகவல் உண்மையில்லை - வருமான வரித்துறை.

Scert - கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும் - இயக்குநரின் செயல்முறைகள்!

Scert - கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும் - இயக்குநரின் செயல்முறைகள்!



ஆசிரியர் கல்வி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பயிற்சி நிறுவனங்கள் / அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்,  ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும்.

பள்ளிப் பார்வையானது பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களது பணித் திறனை மேம்படுத்தவும் மாணவர்களது கற்கும் திறனை மேலும் வலுப்படுத்தவும் உதவும் ஓர் கருவியாக பயன்படுத்தப்படவேண்டும்.

பள்ளிப் பார்வையின்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கல்வியாளர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நெறிமுறைகள்:

SCERT - School Visit Instructions And Proceedings - Download ..

மாணவர்கள் நல்ல மார்க் போட்டால்தான் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!

மாணவர்கள் நல்ல மார்க் போட்டால்தான் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!


மாணவர்கள் நல்ல மார்க் போட்டால்தான் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு எங்கு தெரியுமா? நமது ஒடிஸா மாநிலத்தில்தான்,  ஆம் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வரும் நேரம் மற்றும் பாடம் நடத்தும் விதம் இதைவைத்து மாணவர்களே ஆசிரியர்களுக்கு மதிப்பெண் போடுவார்களாம்.இதில் நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் அந்த ஆசிரியருக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு என அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மதிப்பெண் போட்ட காலம்போய் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பெண் போடும் காலம் வந்துவிட்டது.

இனி ஆசிரியர்களின் நிலைமை???

எல்கேஜி-யுகேஜி வகுப்புகளில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு: தொடக்கக் கல்வி இயக்ககம் தகவல்

எல்கேஜி-யுகேஜி வகுப்புகளில் 65 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு: தொடக்கக் கல்வி இயக்ககம் தகவல்


தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி-யுகேஜி வகுப்புகளில் இதுவரை 65 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக, தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், ஆங்கில வழிக் கல்வி, சீருடை ஆகியவற்றால் ஈர்க்கப்படும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எல்கேஜி, யுகேஜி, வகுப்புகளில் பல்லாயிரம் ரூபாய்களை செலவழித்து வருகின்றனர். இதனால், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதை குறைத்து வருகின்றனர். 


இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் முதல் கட்டமாக 2,381 நடுநிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி, வகுப்புகளை தமிழக அரசு நிகழாண்டு தொடங்கியது. அரசுப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் மழலையர் வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட வகுப்பறைகள், இலவச கற்றல் உபகரணங்கள், கல்விக் கட்டணம் இல்லை போன்ற காரணங்களால் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். 
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது: 
ஒவ்வொரு பள்ளிக்கும் மழலையர் வகுப்புக்கு என ஒரு கற்றல் கருவிப் பெட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். பெற்றோரிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
வழக்கத்தை விட, இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. 2,381 அங்கன்வாடி மையங்களில் இதுவரை 65 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 
அடுத்த கல்வியாண்டில் மேலும் 3 ஆயிரம் மையங்களில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகளைத் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகி றோம். 
நிகழாண்டில் கடந்த ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்ட போது, குழந்தைகள் சேர்க்கை 52 ஆயிரமாக இருந்தது. தற்போது இரு மாதங்களில் கூடுதலாக 13 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றனர்.

Emis - இணையத்தில் புதிதாக ஏற்ற வேண்டிய தகவல்கள் என்ன? எப்படி ஏற்ற வேண்டும்?

Emis - இணையத்தில் புதிதாக ஏற்ற வேண்டிய தகவல்கள் என்ன? எப்படி ஏற்ற வேண்டும்?


தற்போது Emis இனைய தளத்தில் school profile  பகுதியில் மேற்காணும் PDF formatல் உள்ள படத்தில் உள்ளவாறு

1) Additional profile details

2) UDISE+Declaration

என்ற இரண்டு பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள Pdf file-ஐ Download செய்து தெரிந்துகொள்ளவும்.

Download - EMIS NEW Update file...

நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிப்பது பற்றி நாளை பள்ளிக்கல்வி இயக்குனர் ஆலோசனை :

நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிப்பது பற்றி நாளை பள்ளிக்கல்வி இயக்குனர் ஆலோசனை :


பள்ளிக்கல்வித்துறை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மதுரையில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி உள்பட 13 மாவட்ட சிஇஓ, 50 டிஇஓக்கள் உள்பட 100 அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்.




இனிமேல் நாட்டில் இருக்கப்போவது இந்த 12 பொதுத்துறை வங்கிகள்தான்..

இனிமேல் நாட்டில் இருக்கப்போவது இந்த 12 பொதுத்துறை வங்கிகள்தான்..


டெல்லி: கனரா வங்கி, உட்பட பல பெரிய வங்கிகள் வேறு சில வங்கிகளுடன் இணைக்கப்படுவதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.

2017ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. இன்றைய அறிவிப்புக்கு பிறகு நாட்டில் மொத்தமே, 12 பொதுத்துறை வங்கிகள்தான் இருக்கும். இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளின் பட்டியல் இதோ:

- பாங்க் ஆஃப் பரோடா

- யூகோ

- இந்தியன் ஓவர்சீஸ்

- பாங்க் ஆஃப் இந்தியா

- பஞ்சாப் & சிந்த் வங்கி

- மகாராஷ்டிரா வங்கி

- சென்ட்ரல் வங்கி

- எஸ்பிஐ

- பஞ்சாப் நேஷனல் வங்கி + ஓரியண்டல் வங்கி +

யுனைடெட் வங்கி

- கனரா வங்கி + சிண்டிகேட்

- யூனியன் வங்கி + ஆந்திரா + கார்ப்பரேஷன்

- இந்தியன் + அலகாபாத் வங்கி

இவைதான் அந்த 12 வங்கிகளாக இருக்கும். கடந்த வருடம், விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை, பாங்க் ஆஃப் பரோடாவுன் இணைக்கப்பட்டன. எனவே, அவை பாங்க் ஆஃப் பரோடா என்றே அழைக்கப்படும்.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு.. நிதி நிலைமையை சீராக்குமா!

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு வெளியீடு.

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு வெளியீடு.

தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 2019 - மேல்நிலை /இடைநிலை / சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்திக் குறிப்பு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியீடு ( நாள் : 29.08.2019)

இனி தேவையில்லை செல்போன் - வந்துவிட்டது ஆல் இன் ஆல் சிக்ரெட் பிரேஸ்லெட் !

இனி தேவையில்லை செல்போன் - வந்துவிட்டது ஆல் இன் ஆல் சிக்ரெட் பிரேஸ்லெட் !



வருங்காலத்தில் மொபைல் போன்கள் இல்லாமலேயே நாம் மொபைல் போன்களின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் சிக்ரெட் எனும் நிறுவனம் ஒரு சிறப்புக் கருவியை வடிவமைத்துள்ளது. சிக்ரெட் பிரேஸ்லெட் என சொல்லப்படும் இந்த கருவி பிரேஸ்லெட் போல நம் கைகளில் அணிந்துகொள்ளவேண்டும். இந்த பிரேஸ்லெட்டில் உள்ள பைகா புரொஜக்டர் மூலம் நம் கைகளில் நம் செல்போன் திரையை பிரதிபலிக்க செய்து நாம் உபயோகப் படுத்திக் கொள்ளலாம். 

இதன்மூலம் அழைப்புகளை ஏற்பது, சமூகவலைதளங்களைப் பார்ப்பது மற்றும் பாடல் கேட்பது போல அனைத்து வசதிகளையும் நாம் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம். நம் போன்களை ப்ளுடூத் மூலம் இணைத்துக்கொண்டு நமக்குத் தேவையான வசதிகளை ஒரு சொடுக்கின் மூலம் எளிமையாகப் பெற்றுக்கொள்ளலாம். 10 வண்ணங்களில் கிடைக்கும் இந்த பிரேஸ்லெட் இளைஞர்கள் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் இவை சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளன.


தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு வாழ்வளிக்குமா ஆசிரியர் தேர்வு வாரியம்? - முனைவர் மணி கணேசன்



தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு வாழ்வளிக்குமா ஆசிரியர் தேர்வு வாரியம்? - முனைவர் மணி கணேசன்

அண்மையில் தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு

வாரியம் அரசுக் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு 2340 உதவிப் பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த உதவிப் பேராசிரியர்கள் நிரப்பும் பணி சான்றிதழ் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என இரண்டுக் கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு முறையில் முதலாவதாகக் கல்வித்தகுதிச் சான்றிதழ்களுக்கு ஒன்பது மதிப்பெண்ணும் பணிஅனுபவத்திற்குப் பதினைந்து மதிப்பெண்ணும் வழங்கப்பட்டு இரண்டாவதாக நடக்கும் நேர்முகத் தேர்விற்குப் பத்து மதிப்பெண் என மொத்தம் 34 மதிப்பெண் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க சேதி எதுவெனில் குறிப்பிட்ட துறையில் அவர்கள் காட்டிவரும் தனித்திறன்கள், படைப்புகள், பரிசுகள், விருதுகள் முதலியன கவனத்தில் கொள்ளப்படும் என்கிற விவரம் சுட்டப்படவில்லை. இதைப் பற்றி இங்குப் பேசுவதற்கு உரிய காரணமும் இருக்கிறது.

மேல்நிலைக்கல்வி என்பது அறிவாற்றலுக்கான ஓர் உந்து சக்தி. கல்லூரிக்கல்வி என்பது முற்றிலும் அதிலிருந்து வேறுபட்டது. வெறும் பாட அறிவு மட்டும் அதற்குப் போதாது. அதனைத்தாண்டி புதியன படைக்கும் உத்வேகமும் இருப்பவற்றைத் திறனாய்ந்து புதுமை நோக்கில் சீரிய வகையில் வெளிப்படுத்தும் திறனும் கட்டாயம் அவசியம். அப்போதுதான் அந்தந்த துறைகள் மேன்மேலும் செழுமையுற்று வளர்ச்சியடைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறந்த முறையில் அடிகோல நல்ல வாய்ப்பேற்படும். இதனைக் கருத்தில்கொண்டே அண்மைக்காலமாக  உயர்கல்வி ஆய்வு உட்பட அனைத்துத் துறைகளிலும் இன்னும் மேம்படுதல் அவசியமென்பதைத் தவறாமல் வலியுறுத்திவரும் போக்குகள் வரவேற்கத்தக்கவை. இதனை எளிதில் புறந்தள்ளிவிடலாகாது.
காட்டாக, கல்லூரித் தமிழ்த்துறையில் அன்று பேராசிரியர்களாகத் திகழ்ந்தவர்கள் பலரும் தாம் சார்ந்திருக்கும் துறையில் ஆழ்ந்த பற்றும் புலமையும் கொண்டிருந்தனர். மேலும், தலைசிறந்த படைப்பாளிகளாகவும் திகழ்ந்தனர். அதனால்தான் அவர்களாலும் உயரமுடிந்தது. அவர்களிடம் பயின்ற மாணவர்களையும் உயர்த்த முடிந்தது. தமிழியல் சார்ந்த பல்வேறு புதியபுதிய நவீனப் படைப்புகளும் ஆய்வியல் நெறிமுறைகளும் இதன்மூலமாகத் தமிழுக்குக் கிடைத்தன. கிடைத்தும் வருகின்றன. இதை யாராலும் மறுக்கமுடியாது.

அதேவேளையில் பணிநிறைவுக்குப் பின்னரும் அத்தகையோரின் செவ்வியல் சிந்தனைகள், புதுப்புது ஆக்கங்கள், கோட்பாடுகள், வரைவுகள், முன்மொழிவுகள், பரிந்துரைகள், வழிக்காட்டுதல்கள் குறித்த தமிழ்ப்பணிகள் தமிழுலகிற்கு இன்றும் தேவைப்படுவதாக உள்ளன. இது நடப்பு உயர்கல்வியில் காணப்படும் போதாமையினை வெளிப்படுத்துவதாக உள்ளன என்றே சொல்லவியலும். இன்றும் பலர் நவீனம் குறித்த புரிதல்களுக்கும் உரையாடல்களுக்கும் ஆக்கங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தர முன்வருவதில்லை. அவர்கள் படித்த படிப்போடு நின்றுகொண்டு நிகழ்காலச் சிந்தனை வெளிப்பாடுகள் சார்ந்த தொடர்வாசிப்புகளுக்குத் தம்மை ஆட்படுத்திக்கொள்ளாமல் திணறும் ஆரோக்கியமற்ற சூழல் தமிழ்வளர்ச்சிக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டை எனலாம். அதற்காகத் தமிழிலக்கியத்தின் நவீனம் சார்ந்த நோக்கும் போக்கும் தேங்கிவிடவில்லை. யாரோ சிலரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்றாலும் அதன்வேகம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.ஆக,பல்கலைக் கழக உயர்கல்வி எல்லாவகையிலும் சிறந்து விளங்கிட நல்ல தரமிக்க ஆய்வாளர்களும் படைப்பாளர்களும் பெருகுதல் இன்றியமையாதது. அதற்கு உரமூட்டும் விதமாக உயர்கல்வி ஆய்வுகளை மேம்படுத்துவதும் முறைபடுத்துவதும் தகுதிமிக்கோரைப் பணியில் நியமனம் செய்யமுனைவதும் அவசியம். பல முனைவர் பட்ட ஆய்வுகள் இன்றும் காசு கொடுத்து எழுதி வாங்கப்படுகின்ற அவலம் கொடுமையானது. இதற்கென்றே பல பட்டறைகள் தொழிற்சாலைகள்போல் பெருநகரங்களில் பெருகியுள்ளன. அதற்கு இத்தகையோர் துணைபோவதுதான் மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது. பணமே முதன்மை என்றாகிவிட்ட நடப்பு உலகில் படிப்பு மட்டும் தப்பிவிடமுடியுமா?மேலும், இத்தகைய வழிகளில் பெறப்படும் ஆய்வுகள் எப்படித் தரமுள்ளவையாக இருக்கவியலும்? அவ் ஆய்வாளர் எதிர்காலத்தில் எங்ஙனம் திறன்மிக்க பேராசிரியராக விளங்குவார்?இதுமாதிரியான கேள்விகள் சாமானியனுக்கும் எழுதல் இயற்கை. ஆதலால், உயர்கல்வியின் உயராய்வுகள் குறித்த உண்மைத்தன்மைகள் பற்றி ஆராய ஓர் உயர்மட்ட வல்லுநர்குழுவினை ஒவ்வொன்றுக்கும் துறைவாரியாக வெளிப்படைத்தன்மையோடு நியமித்திடுதல் மற்றும் கண்காணித்திடுதல் அரசின் முக்கிய கடமையெனலாம். இத்தகைய இழிநிலைகள் முறையான படிப்பிலேயே காணப்படுவதுதான் வருந்தத்தக்க செய்தியாக உள்ளது. 

அதேபோல், பணியனுபவத்திற்குக் காட்டப்படும் முக்கியத்துவம் படைப்பனுபவத்திற்கும் காட்டப்பட வேண்டும். வெறும் பணியனுபவம் மட்டும் பேராசிரியர் பணிக்குப் போதாது. தமிழ்ப் படைப்பிலக்கியங்களில் முதன்மைப்பெற்று, கல்லூரி பணியனுபவம் கிடைக்கப்பெறாதத் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறைகளில் பல்லாண்டுகள் பணியாற்றும் முனைவர் பட்டம் பெற்ற, பல்கலைக்கழக மான்யக்குழு நடத்தும் கல்லூரி விரிவுரையாளருக்கான தேசிய, மாநிலத் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சியுற்ற ஆசிரியர்கள் துறைமாறுதல் மூலமாகக் கல்விச்சேவை செய்திட இதுநாள்வரை இத்தேர்வு முறைகளில் புதுத்திருத்தங்கள் ஏதும் மேற்கொள்ளாதது கவலைத்தரக்கூடிய செய்தியாகும். எல்லாவகைத் திறமையிருந்தும் அத்தகையோருக்கு இத்தகையப் பணிக்கிடைப்பதில் உள்ள தடைகள், பாரபட்சப் போக்குகள் ஆகியவை உடன் களையப்படுதல் பேருதவியாக அவர்களுக்கு அமையக்கூடும். இதனால் அரசுக்குப் பெரும்நிதிச்சுமையேதும் ஏற்படப் போவதில்லை. அவர்களது பட்டய, பட்டப் படிப்புகளில் பயிலப்பட்ட உளவியல் கருத்துகள், புதிய பயிற்றுவிப்பு முறைகள், கல்விச் செயலாய்வுகள், நிர்வாகத் திறன்கள், ஆளுமைப் பண்புகள், கற்போரை எளிய வகையில், வழியில் கையாளும் நவீன உத்திமுறைகள், தனியாள் ஆராய்ச்சி வழிமுறைகள், வாழ்க்கையனுபவ வழிக்காட்டல்கள் மற்றும் ஆலோசனைகள் போன்ற கூடுதல் தகுதிகளால் இளம் பட்டதாரி மாணவர்கள் நிச்சயம் கவரப்படுவர்.

தவிர, கல்லூரி பணியனுபவத்தைக் காரணங்காட்டி இவர்களைப் புறந்தள்ளுவதென்பது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நல்ல அறமாக இருக்கமுடியாது. அது இந்திய அரசியலமைப்பு வலியுறுத்தும் அனைவருக்கும் சமநீதி, சமவாய்ப்பு ஆகியவற்றிற்கு எதிரானதாகவும் போகக்கூடும். இவர்களின் பள்ளிப் பணியனுபவத்தைக் கல்லூரிப் பணியனுபவத்திற்கு ஈடாகக் கருத அரசின் மனச்சாட்சி இடம்தராவிட்டாலும் அதை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளுதல் நல்லதல்ல. அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரந்தரமில்லாக் கௌரவ விரிவுரையாளரின் ஓராண்டுப்பணிக்கு வழங்கப்படும் இரண்டு மதிப்பெண்களுக்குப் பதிலாக அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நிரந்தரப் பணியிடங்களில் பணிபுரிந்திடும் ஆசிரியர்களின் ஓராண்டுப் பணியனுபவத்திற்கு குறைந்தபட்சமாக ஒரு மதிப்பெண்ணாவது வழங்க அரசு முன்வரவேண்டும். இது ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் கனவாகவும் உள்ளதைக் கவனத்தில் எடுத்துக்கொள்வது நலமுண்டாகும். இத்தகு தகுதிவாய்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பிலேயே கூடுதல் திருத்தமொன்றை மேற்கொண்டு அவர்களுக்கும் ஒரு நல்ல வழி அமைத்துத் தருதல் அரசின் கடமையாகும்.

அதுபோல், உண்மையான படைப்புகளுக்கும் அப்படைப்பை மேற்கொண்ட கல்லூரிப் பேராசிரியர் பதவிக்குத் தகுதிவாய்ந்த தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் உரிய முக்கியத்துவத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் அளிக்க முன்வருதல் சாலச்சிறந்ததாக அமையும். அதற்கு வழிகோலுவதாக மீதமுள்ள பதினாறு மதிப்பெண்களைப் படைப்புகள், ஆய்வுகள், வெளியீடுகள், விருதுகள் ஆகியவற்றிற்கு பகிர்ந்தளித்து அவர்களின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான பங்களிப்பிற்கு முன்னுரிமை வழங்க ஆவனச் செய்வதன் வாயிலாகத் திறமை மிகுந்த பேராசிரியர்களைக் கல்லூரிப் பணிக்குக் கொண்டுவர முடியும். அப்போதுதான் யாரும் எளிதில் விரும்பிப் படிக்காமல் கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரு தீண்டப்படாதத் துறையாக விளங்கும் தமிழ்த்துறைக்கு மீளவும் புத்துணர்ச்சிப் பாய்ச்சியது போலிருக்கும். தமிழ்மொழி பற்றிய ஆய்வுகள் உலகத் தரத்திற்கு ஒப்பாகத் திகழும். மேலும், தமிழ்மொழி பற்றிய போதிய அடிப்படை அறிவு இல்லாமல் மருத்துவம், பொறியியல் முதலான தொழிற்கல்வி சார்ந்த உயர்படிப்பினை ஆங்கிலவழியிலேயே பயிலும் துர்பாக்கிய நிலையால் அவை குறித்த உயராய்வுகள் பல்கிப் பெருகுவதில் எண்ணற்ற சிக்கல்கள் நிறைந்துள்ளன. மனிதச் சிந்தனை அவரவர் தாய்மொழியிலேயே எழும் என்பது மொழியியல் வல்லுநர்களின் கருத்தாகும். ஆக, தாய்மொழியாம் தமிழ்மொழி வழிக்கல்வியில் அனைத்துப் படிப்புகளும் தடையின்றி மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்வதில் அரசாங்கத்தின் இன்றியமையாத கடமையெனலாம். அக்குறிக்கோள் தம் இலக்கை எய்திடவும் தாய்மொழியில் பிழையின்றி அனைவரும் பிறருடன் எளிதில் தொடர்புகொண்டிடவும் தமிழ்மொழி அனைத்துக் கல்லூரி நிலைகளிலும் குறைந்தது முதல்பருவத்தில் நிறைவு செய்திடும் வகையில் ஒருபாடமாக ஒருமித்தக் கருத்துடன் வைக்க அரசு உறுதிபூணுதல் நல்லது. அதன்மூலமாக அத்தகைய கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக வாய்ப்பேற்படும். அது பாடம்சார்ந்து எழும் சிலபல சந்தேகங்களுக்கும் புரியாத் தன்மைகளுக்கும் நிவர்த்தி செய்திட வழிப்பிறக்கும். எல்லா விதமான அரிய வளங்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ள செம்மொழியாம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் மீட்சிக்கும் பல்லாற்றானும் உதவிபுரிவது என்பது மனித ஆற்றலை மேம்படுத்துவதற்குச் சமமாகும். ஏனெனில், மொழிவளர்ச்சியே ஓர் இனத்தின் பெருமையாகும். தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை தமிழுக்கு முக்கியத்துவம் தந்து அதனைத் தரப்படுத்துவதென்பது அதற்கான முதற்படிக்கட்டு எனலாம். இதனடிப்படையில் தமிழுக்கும், தகுதிமிக்க தமிழ்ப் படைப்பாளிகளுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் வாழ்வளிக்குமா தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும்?

Recent Posts

Total Pageviews

Blog Archive