இளம் அறிவியலாளர்களுக்கு மாதம் ரூ10 ஆயிரம் ஆதரவு ஊதியம்: செப்.6க்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் ஆர்.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக இளம் அறிவியலாளர்களுக்கு ஆதரவு ஊதியம் அளித்தல் என்ற திட்டத்தின் கீழ் 40 வயதுக்குட்பட்ட இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொழில்நுட்பங்களின் நுணுக்கங்களை நன்கு கற்றுக்கொள்வதற்காக ஒரு முதுநிலை அறிவியலறிஞருடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்யவும், அதிநவீன கருவிகளின் செயல்முறை தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளவும் ஊக்கப்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் பெற்று வரும் மாத ஊதியத்துடன் கூடுதலாக ஆதரவு ஊதியம் மாதந்தோறும் ரூ10 ஆயிரம் இரண்டு முதல் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் விவரங்கள் www.tanscst.nic.in என்ற இணையதளத்தில் உள்ளது. முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2 படிவங்களில்,
"உறுப்பினர் செயலர்,
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம்,
தொழில்நுட்ப கல்வி இயக்கக வளாகம்,
சென்னை -600025"
என்ற முகவரிக்கு 6.9.2019 தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்