அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது 1000 புத்தகங்களுடன் நுாலகம் செயல்பட வேண்டும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது 1000 புத்தகங்களுடன் நுாலகம் செயல்பட வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை: ஒவ்வொரு அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் குறைந்தது 1000 புத்தகங்கள் உள்ளவாறு பள்ளி நுாலகம் செயல்பட வேண்டும்.
இந்நுாலகத்துக்கு தினமும் தமிழ் மற்றும் ஆங்கில தினசரி செய்தித்தாள் வாங்கி மாணவர்கள் படிக்க அறிவுறுத்த வேண்டும். நுாலகப் பணியை மேற்கொள்ள ஒரு ஆசிரியரை நியமித்து மாணவர்களின் நுாலகம் பயன்படுத்தும் திறனை அதிகரிக்க வேண்டும்.குறிப்பிட்ட நேரம் மாணவர்களுக்கு படிக்கும் வாய்ப்பு அளித்து வாசிக்கும் திறன் பேச்சு திறன்எழுத்து திறன் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்தவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.