பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வி அலுவலர்கள் 102 பேரிடமும் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள முடிவு
கல்வி அலுவலர்கள் 102 பேருக்கு ஆகஸ்ட் 20 முதல் 3 நாட்கள் நிர்வாகப் பயிற்சி - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
கல்வி அலுவலர்கள் 102 பேருக்கு ஆகஸ்ட் 20 முதல் 22ம் தேதி வரை 3 நாட்கள் நிர்வாகப் பயிற்சி நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. முதன்மைக்கல்வி அலுவலர்கள் 32 பேருக்கும், மாவட்டக்கல்வி அலுவலர்கள் 70 பேருக்கும் மாமல்லபுரத்தில் 3 நாள் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியின் போது மாணவர் சேர்க்கை விவரங்கள், பள்ளிக்கட்டிட நிலை மற்றும் விளையாட்டு மைதானங்கள் குறித்து அலுவலர்களிடம் ஆய்வு நடத்தப்படும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வி அலுவலர்கள் 102 பேரிடமும் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.