ரூ.11,900 ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தருமபுரி கூட்டுறவு நகர வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்:
உதவியாளர் பிரிவில் 07 பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
ஊதியம்:
மாதம் ரூ.11,900 முதல் ரூ.32,450 வரை வழங்கப்படும்.
வயதுவரம்பு:
18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் ரூ.250 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.drbdharmapuri.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://drbdharmapuri.net/recruitment/admin/images/Dharmapuri%20UB%20Advertisement166266_1565268354.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.09.2019