பள்ளிவளர்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு பாடுபடும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசின் விருதுக்காக, மாவட்ட அளவிலான பரிந்துரை பட்டியலை, வரும் 14-ம் தேதிக்குள் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த மாத இறுதியில் தகுதியான ஆசிரியர்கள் 350 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.
Post Top Ad
Monday, August 12, 2019
Home
Unlabelled
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - ஆசிரியர்களின் பரிந்துரை பட்டியல் : வரும் 14ஆம் தேதிக்குள் சமர்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு