1 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம்... தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி வேலை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, August 15, 2019

1 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம்... தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி வேலை

1 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம்... தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி வேலை



தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Director காலியிடங்கள் : 13

சம்பளம் : மாதம் ரூ. 56,100 - 1,77,500

பணி: Child development Officer 

காலியிடங்கள் : 87+2

சம்பளம் : மாதம் ரூ.36,900- 1,16,600 

வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி கணக்கிடப்படும். 

தகுதி: மனையியல் அறிவியல்(ஹோம் சயின்ஸ்), உளவியல், சமூகவியல், குழந்தை மேம்பாடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமூக பணி அல்லது மறுவாழ்வு அறிவியல் போன்ற துறைகளில் ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 

கட்டணம்: ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வு கட்டணம் ரூ.200 இதனை நெட் பேக்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லனில் செலுத்தலாம்.தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpsc.gov.in, http://www.tnpsc.exams.net, http://www.tnpsc.exam.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு: 2019 செப்டம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/notifications/2019_24_assistant_director_CDPO_NEW.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 11.09.2019


Post Top Ad