சென்னை, பிளஸ் 1 துணை தேர்வின் மறுமதிப்பீடு முடிவு, இன்று வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 பொது தேர்வுக்கான, சிறப்பு துணை தேர்வு ஜூனில் நடந்தது. இதில், பங்கேற்றவர்களில் சிலர், தேர்வு முடிவுக்கு பின், மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கான திருத்த முடிவு, இன்று பகல், 2:00 மணிக்கு பின், scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.பதிவு எண் உள்ளோர் மட்டும், திருத்திய மதிப்பெண்ணுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியலை, http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
Thursday, August 29, 2019
Home
Unlabelled
பிளஸ் 1 தேர்வு மறுமதிப்பீடு: இன்று, 'ரிசல்ட்'