பிளஸ் 2 துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 21-ம் தேதிமுதல் வழங்கப்படும்
அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர் வெழுதியவர்கள் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு உட்பட) தங்கள் அசல் மதிப்பெண் சான்றி தழ்களை ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
பழைய நடைமுறை யில் (1,200 மதிப்பெண்கள்) தேர் வெழுதியவர்களுக்கும் ஒருங்கி ணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். புதிய நடைமுறையின்படி தேர் வெழுதி அனைத்துப் பாடங்களி லும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான மதிப்பெண் சான் றிதழ்கள் தனித்தனியே வழங்கப் படும். 11, 12-ம் வகுப்புகளில் முழுமையாக தேர்ச்சியடையாத வர்களுக்கு அவர்கள் 2 தேர்வு களிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட மதிப்பெண் பட்டியலாக வழங்கப் படும். இந்த மாணவர்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு தனித்தனி மதிப்பெண் சான்றிதழ் கள் வழங்கப்படும்.