'டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, வரும், 26ல் இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 8,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, மருத்துவ கல்வி இயக்ககம் துவக்கியுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி, வரும், 26ல் துவங்குகிறது. விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற, இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்டம்பர், 4க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தர வரிசை பட்டியல், செப்., 9ல் வெளியிடப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது