குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம் ..மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, August 5, 2019

குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம் ..மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை

குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம் ..மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை



தமிழகத்தில் குறைந்த மாணவர் களைக் கொண்ட 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆக.10-ம் தேதிக்குள் நூலகம் அமைக்க வேண்டும் என நூலகத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக நீல கிரி மாவட்டத்தில் 6 பள்ளிக் கட்டிடங்களில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. இதேபோல, வேலூர், சிவகங்கையில் தலா 4 பள்ளிகளிலும், விருதுநகர், திருவண்ணா மலை, திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா 3 பள்ளி களிலும் நூலகம் தொடங்கப்பட உள்ளது.மேலும், விழுப்புரம், தூத்துக் குடி, புதுக்கோட்டை, கரூர், திண் டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங் களில் தலா 2 பள்ளிகளிலும், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டி னம், காஞ்சிபுரம் மற்றும் கோவை யில் தலா 1 பள்ளியிலும் நூலகம் அமைக்கப்பட உள்ளது.

Post Top Ad