கடிதம் எழுதும் போட்டி முதல் பரிசு ரூ.50 ஆயிரம்

கடிதம் எழுதும் போட்டி முதல் பரிசு ரூ.50 ஆயிரம்


தபால் துறை சார்பில், தேசிய கடிதம் எழுதும்போட்டிக்கு, சிறுவர்கள், பெரியவர்களிடம் இருந்து கடிதங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய தபால் துறை சார்பில், தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது.&'அன்புள்ள பாபு - மகாத்மா காந்தி - நீங்கள் அழியாதவர்&' என்ற தலைப்பில், கடிதங்களை எழுதி அனுப்பலாம். 18 வயதுக்கு கீழ் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என, இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.தபால் அலுவலகங்களில் விற்கப்படும், &'இன்லேண்ட் லெட்டரில்&' 500 வார்த்தைகளுக்கு மிகாமல் அல்லது ஏ4' அளவு வெள்ளை தாளில், 1,000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட, மாநில மொழிகளிலும் எழுதலாம்.தமிழக அளவில் தேர்ந்தெடுக்கப்படும், சிறந்த முதல் மூன்று கடிதங்களுக்கு, முறையே, 25 ஆயிரம், 10 ஆயிரம், 5,000 ரூபாய் வீதம் பரிசுகள் வழங்கப்படும். தேசிய அளவில், சிறந்த முதல் மூன்று கடிதங்களுக்கு, முறையே, 50 ஆயிரம், 25 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் வீதம் பரிசுகள் வழங்கப்படும். கடிதங்களை, நவ., 11ம் தேதிக்குள், &'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை, 600 002&' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும் விபரங்களை, www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive