7 மாவட்ட ஆரம்பப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை - பள்ளிக் கல்வித்துறை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக அரசு ஆரம்பப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதற்காக அங்கன்வாடி மையத்திற்கு ஒரு இடைநிலை ஆசிரியர் வீதம் 2,381 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஜூன் 3-ம் தேதி முதல் தொடங்கிய மழலையர் வகுப்புகளில் 65,000 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கோவை, திருப்பூர், திருச்சி,கரூர், பெரம்பலூர், விருதுநகர், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை இல்லை என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, 46 அரசு துவக்கப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் நூலகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை தொடக்க கல்வித்துறை நடத்திய கணக்கெடுப்பில் 7 மாவட்டங்களில் ஆரம்ப பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.