B.Ed - கட் - ஆஃப் மதிப்பெண் இணையத்தில் வெளியீடு கலந்தாய்வு நாளை தொடக்கம்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, August 5, 2019

B.Ed - கட் - ஆஃப் மதிப்பெண் இணையத்தில் வெளியீடு கலந்தாய்வு நாளை தொடக்கம்!

B.Ed - கட் - ஆஃப் மதிப்பெண் இணையத்தில் வெளியீடு கலந்தாய்வு நாளை தொடக்கம்!


தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். படிப்பில் 2,040 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.

 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நடப்புகல்வி ஆண்டில் சேர 3,800 மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு கால அட்டவணை www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை பதிவுசெய்தால் தங்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணையும் கலந்தாய்வு நாள் மற்றும் நேரத் தையும் தெரிந்து கொள்ளலாம்.விருப்பமான கல்லூரியைத் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னை திருவல்லிகேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம் பாட்டு நிறுவனத்தில் நாளை (ஆக.7) முதல்13-ம் தேதி வரை (12-ம் தேதி நீங்கலாக) நடை பெறுகிறது.

கலந்தாய்வு நாள், விவரம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தபால் மூலமாக வும், எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளரும், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம் பாட்டு நிறுவனத்தின் முதல்வரு மான பேராசிரியை எம்.எஸ்.தில்லைநாயகி தெரிவித்துள்ளார்.


Post Top Ad