புதிய கல்விக் கொள்கை ஓர் பார்வை!!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, August 1, 2019

புதிய கல்விக் கொள்கை ஓர் பார்வை!!!

புதிய கல்விக் கொள்கை ஓர் பார்வை!!!



புதிய  கல்வி கொள்கை  :-

பள்ளிகூடம்  சேரும்  வயது 

3 - 5 வயது வரை   யூகேஜி , எல்கேஜி

5 - 10 வயது  வரை   1 ம் - 5 ம் வகுப்பு

3 ம் வகுப்பில்  தேசிய  பொது  தேர்வு   , இந்த  3 ம் வகுப்பு  தேசிய  பொது  தேர்வில்  தோல்வி  அடைந்த  8 வயது  மாணவன்  , கல்வியை  தொடர முடியாது  -  வேறு தனியார்  கோச்சிங்  சென்டரில்  படித்து  3 ம் வகுப்பு  தேசிய பொது  தேர்வில்  வெற்றி பெற்ற  பிறகு  4 ம்  வகுப்பில்  படிக்கனும்.

5 ம் வகுப்பில்  மீண்டும்  தேசிய  பொது  தேர்வு  எழுதி  வெற்றி  பெறனும்  , இதில்  தோல்வி  அடைந்தால்  அந்த  10 வயது மாணவன்  , மீண்டும்  தேசிய பொது தேர்வில் வெற்றி  பெறனும்  அல்லது  அவங்க  அப்பன்   ஆத்தா  செய்யும்   தொழிலுக்கு  போயிடனும்

8 ம் வகுப்பில்  மீண்டும்  ஒரு  தேசிய  பொது  தேர்வு  எழுதனும்  இதில்  வெற்றி பெற்றால்  பள்ளிகூட படிப்பை  தொடரலாம்  அல்லது  தோல்வி  அடைந்தால்   மீண்டும்  தனியாக  தேர்வு  எழுதி  படிப்பை  தொடரனும்  அல்லது   அந்த  13 வயது  மாணவன்  குடும்ப பரம்பரை   தொழில்  செய்ய  போகலாம்

10 ம் வகுப்பில்  மீண்டும்  ஒரு  தேசிய  பொது  தேர்வு  எழுதி  வெற்றி  பெற்றால்   மேலும்  11 ம் வகுப்பு  படிக்கலாம்   அல்லது  தோல்வி  அடைந்தால்  அந்த  15 வயது  மாணவன்  ஏதாவது  கூலி  வேலைக்கு  போகலாம்

11ம்  வகுப்பில்   மீண்டும்  ஒரு  தேசிய  பொது  தேர்வு

12 ம்  வகுப்பில்  மீண்டும்  ஒரு  தேசிய  பொது  தேர்வு 

11 & 12 ம்  வகுப்பில்  முழுவதுமாக  தேர்வில்  வெற்றி  பெற்றால்   உடனே   நினைத்த  கல்லூரியில்   நினைத்த  பட்ட படிப்பு  சேர  முடியாது   ,  அதற்கு   கல்லூரி  நுழைவ  தகுதி .தேர்வு  எழுதி   வெற்றி  பெற்றால்  மட்டுமே   கல்லூரியில்   சேர்ந்து  படிக்க  முடியும்

அதுவும்   மருத்துவம்  , பொறியியல் , சட்டம்  சார்ந்த  எல்லா  பட்ட படிப்புகளுக்கும்  நீட்   தேர்வு   எழுதி  அதில்  வெற்றி  பெறனும்

பிறகு   மருத்துவம்  , பொறியியல்  , சட்டம்  சாந்த  பட்ட படிப்புகளை   முழுவதுமாக  வெற்றி  பெற்று  தேர்ச்சி  பெற்றாலும்   டாக்டராக   வக்கீலாக   இன்ஜினியராக  பணியாற்ற    NEXT , PEEngg,  PLE,  போன்ற  தகுதி   தேர்வு  எழுதி  வெற்றி  பெற்றால்  மட்டுமே   டாக்டராக  வக்கீலாக   இன்ஜினியாற்ற   பணியாற்ற  முடியும்

இது  எதுவுமே  படிக்காமல்    எம்எல்ஏ, எம்பி, பிரதமர்   கவர்னர்,கல்வி  அமைச்சர் ,வியாபாரி ஆகி விடலாம்.

Post Top Ad