பள்ளியில் சத்துணவு உண்ட முதன்மைக்கல்வி அலுவலர்*
👉 இன்று ( 01_08_2019) கோயம்புத்தூர் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன் அவர்கள் பேரூர் கல்வி மாவட்டத்தில் பள்ளிப் பார்வையின் போது
குமிட்டிபதி அரசு உயர்நிலைப்பள்ளியில் பரிமாறப்பட்ட மதிய
உணவு (சத்துணவு)
உண்டபோது…
👉பள்ளி ஆய்வு அலுவலர்களாக உள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் பள்ளி ஆய்வின் போது சத்துணவு எப்படி சமைத்துள்ளார்கள் என பார்ப்பதோடு இல்லாமல்,இந்த முதன்மைக்கல்வி அலுவலர் போல மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் சத்துணவை உண்டு பார்த்து ஆய்வு செய்யும்போது சமைக்கப்பட்ட உணவு அற்புதமாக இருந்தால் பாராட்டியும்,குறைகள் காணப்பட்டால் சுட்டிக்காட்டியும் செல்லும்போது சத்துணவு அமைப்பாளர் தலைமையில் சத்துணவை தயார் செய்யும் சமையலர்களுக்கு புதிய உத்வேகமும்,பொறுப்புணர்வு கூடுவதோடு, இன்னும் சிறப்பாக சத்துணவை அளிக்க தூண்டுகோலாக அமைகிறது.
🍅🥕பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் முன் சாப்பிட்டுப் பார்த்தப் பின் வழங்க தலைமையாசிரியர்களுக்கும்,சத்துணவு அமைப்பாளர்களுக்கும் தமிழக அரசு 2013 ஆம் ஆண்டு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
👏👏தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதை மறவாமல் முன் மாதிரியாக எளிமையுடன் சத்துணவை உண்ட கோயம்புத்தூர் முதன்மைக்கல்வி அலுவலரைப் பாராட்டலாம்🤝