மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, August 15, 2019

மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு


கடந்த அக்டோபர் (04/10/2018) அன்று ஜாக்டோ ஜியோ அழைப்பின் பேரில் போராடும் ஆசிரிய சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.

இதில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற தலைமைச் செயலரின் சுற்றறிக்கைக்குப் பிறகு இன்னும் தீவிரமாக நடந்தது
இது இப்படி இருக்க .....

மழை விடுப்பு அறிவிப்பு செய்யப்பட்ட புதுகை திரூவாரூர் மாவட்டங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற ஒரு விசித்திரமான உத்தரவை நிர்வாகம் போட்டதாக கூறி போராடாத ஆசிரிய சங்க முன்னோடிகள் பள்ளிக்கு வந்து கையெழுத்து போட்டனர்.

இதை இப்படியே விட்டால் பின்னாளில் விடுமுறை மாணவர்களுக்கு மட்டுந்தான் என்ற நிலை வந்துவிடும்

இந்த வழக்கில் பதிலுரைத்த அரசு வழக்கறிஞர் , அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது , அது வேலை நாள் இல்லை என பதிலுரைக்க
அதனை ஏற்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

இந்த வழக்கின் மூலம் மழை விடுமுறை உள்ளிட்ட விடுமுறை நாட்களை (ஆசிரியர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு கையெழுத்து போட்டாலும் ) பள்ளி வேலை நாளாக கருத முடியாது ...... என்ற ஆசிரியரின் அடிப்படை உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது


Post Top Ad