பள்ளி கல்வி இயக்குனரகம் தொடக்கநிலை முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான பள்ளிகளுக்கு வேலை நாட்கள் பட்டியலை வெளியிடுக-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
தினந்தோறும் ஒரு அறிவிப்பு வெளியிடும் பள்ளிக்கல்வித்துறை., பள்ளி திறந்து ஏறக்குறைய இரண்டரை மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில்,, இன்னும் இந்த ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிடாமல் இருப்பதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வருத்தத்துடன் பதிவு செய்கிறது .... மேலும் இதன் காரணமாக தமிழகம் முழுவதும் நாளைய தினம்(17/08/2019 சணிக்கிழமை) பள்ளி உண்டா இல்லையா என்ற குழப்பம் மேலோங்கி,, சில இடங்களில் பள்ளி உண்டு என்றும் ,சில இடங்களில் பள்ளி இல்லை என்றும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கருதுகிறது.. இந்த சூழலை இனி தவிர்க்கும் பொருட்டு உடனடியாக பள்ளி கல்வி இயக்குனரகம் தொடக்கநிலை முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான பள்ளிகளுக்கு வேலை நாட்கள் பட்டியலை வெளியீட்டு குழப்பங்களைத் தவிர்க்கதக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களை கேட்டுக்கொள்கிறது...
கே.பி.ரக்ஷித்.
மாநில பொருளாளர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி