பொதுத்துறை வங்கி பணிகளுக்கான ஐபிபிஎஸ் தேர்வு தேதிகள் அறிவிப்பு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, August 4, 2019

பொதுத்துறை வங்கி பணிகளுக்கான ஐபிபிஎஸ் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

பொதுத்துறை வங்கி பணிகளுக்கான ஐபிபிஎஸ் தேர்வு தேதிகள் அறிவிப்பு!


இந்தியாவிலுள்ள 17 பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைந்து, புரொபஷனரி அதிகாரிகள் மற்றும் மேனேஜ்மெண்ட் டிரைனீஸ் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஐபிபிஎஸ் (IBPS) எனப்படும் பொது தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. 2020 - 21 ஆம் ஆண்டிற்கான ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பொது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: 
1. புரொபஷனரி அதிகாரிகள் (Probationary Officer) 
2. மேனேஜ்மெண்ட் டிரைனீஸ் (Management Trainees)

மொத்த காலியிடங்கள் = 4,336

முக்கிய தேதிகள்: 
அறிவிப்பு வெளியான தேதி: 02.08.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 07.08.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.08.2019 
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 28.08.2019

தேர்வு நடைபெறும் தேதிகள்: 
முதல் நிலைத்தேர்வு நடைபெறும் தேதிகள்: 12.10.2019, 13.10.2019, 19.10.2019 மற்றும் 20.10.2019 
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 30.11.2019

தேர்வுக்கட்டணம்: 
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.100 
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற பிரிவினர் - ரூ.600

வயது வரம்பு: (01.08.2019 அன்றுக்குள்) 
குறைந்தபட்சமாக 20 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை இருத்தல் வேண்டும்.அதுமட்டுமல்லாது விண்ணப்பிக்க விரும்புவோர் 02.08.1989ஆம் தேதிக்கு பின்னும் 01.08.1999ஆம் தேதிக்கு முன்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக,ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.ibps.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Post Top Ad