திருப்பூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக திருப்பூர்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால்பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைஅளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கோவை , நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.