இனி தேவையில்லை செல்போன் - வந்துவிட்டது ஆல் இன் ஆல் சிக்ரெட் பிரேஸ்லெட் !
வருங்காலத்தில் மொபைல் போன்கள் இல்லாமலேயே நாம் மொபைல் போன்களின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் சிக்ரெட் எனும் நிறுவனம் ஒரு சிறப்புக் கருவியை வடிவமைத்துள்ளது. சிக்ரெட் பிரேஸ்லெட் என சொல்லப்படும் இந்த கருவி பிரேஸ்லெட் போல நம் கைகளில் அணிந்துகொள்ளவேண்டும். இந்த பிரேஸ்லெட்டில் உள்ள பைகா புரொஜக்டர் மூலம் நம் கைகளில் நம் செல்போன் திரையை பிரதிபலிக்க செய்து நாம் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
இதன்மூலம் அழைப்புகளை ஏற்பது, சமூகவலைதளங்களைப் பார்ப்பது மற்றும் பாடல் கேட்பது போல அனைத்து வசதிகளையும் நாம் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம். நம் போன்களை ப்ளுடூத் மூலம் இணைத்துக்கொண்டு நமக்குத் தேவையான வசதிகளை ஒரு சொடுக்கின் மூலம் எளிமையாகப் பெற்றுக்கொள்ளலாம். 10 வண்ணங்களில் கிடைக்கும் இந்த பிரேஸ்லெட் இளைஞர்கள் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் இவை சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளன.