அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் - அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
1058 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 90 லட்சம் மதிப்பிலான ஆண்ட்ராய்டு செல்போன் கரூரில் போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் துறையின் சார்பில் 1058 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூபாய் 90 லட்சம் மதிப்பில் ஆண்ட்ராய்டு செல்போன் வழங்கி போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் விழாவில் செல்போனை வழங்கிய பின்னர் போக்குவரத்துறை அமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அங்கன்வாடி பணியாளர்கள் ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று குழந்தைகள் வளர்ச்சி பற்றி அறிந்து வர வேண்டும். அவர்களது வேலைப்பளுவை குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய மாநில அரசுகள் இணைந்து கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த ஆண்ட்ராய்டு செல்போன் வழங்கும் திட்டம்
ரூபாய் 8000 மதிப்புள்ள இந்த ஆண்ட்ராய்ட் போனை நாங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். மேலும், தமிழகம் இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக உள்ளது.குறிப்பாக இன் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே மிக மிக குறைவாக உள்ளது என்றும்., இதேபோல போக்குவரத்து துறை சுகாதாரத் துறையும் இந்திய முன்னணி மாநிலமாக உள்ளது உலக அளவில் இளைஞர்கள் அதிகம் கொண்ட இந்தியா தமிழகம் உள்ளது