நெட் தேர்வுகளுக்கு தேதி அறிவிப்பு
முதுநிலை பட்டதாரிகள், உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், நெட் அல்லது மாநில அரசின், செட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும், எந்த பல்கலை மற்றும் கல்லுாரிகளிலும், பணிக்கு சேரலாம். இதன்படி, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், தேசிய தேர்வு முகமை, ஆண்டுதோறும், நெட் தேர்வை, இரண்டு முறை நடத்துகிறது.
அதேபோல, அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலான, சி.எஸ். ஐ.ஆர்.,ரில், ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வோருக்கு, உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, சி.எஸ்.ஐ.ஆர்., - நெட் என்ற தகுதி தேர்வு தனியாக, ஆண்டுக்கு, இரு முறை நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில், இந்த தேர்வுக்கான கால அட்டவணையை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இவை, கணினி வழி தேர்வாக நடத்தப்படும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துஉள்ளது.விரிவான விபரங்களை, தேசிய தேர்வு முகமையின், https://nta.ac.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.