ஆசிரியர்கள்-மாணவர்கள் இணைந்து தயாரித்த ஒரு லட்சம் விதை பந்துகள்..!!
அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பள்ளிக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர்.
இதற்காக 10 குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதில் சிறப்பாக மற்றும் எண்ணிக்கையில் அதிகமாக செய்த மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து இந்த விதை பந்துக்களை ஏரிக்கரைகள், வயல்வெளிகள் மற்றும் சாலை ஓரங்களில் என பல்வேறு இடங்களில் வீசி மரங்களை வளர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.