1.8.2018 மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், தற்போதைய பள்ளியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் உபரி ஆசிரியர் கண்டறியப்பட்டு
பணிநிரவல் பட்டியல் தயாரிக்கப்படுகிறது
2. அந்தப் பட்டியலில் இருந்து பாடவாரியாக இளையோர் முதல் மூத்தோர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
அவ்வாறு தயாரிக்கும் போது அந்தப் பதவியில் சேர்ந்த தேதி அடிப்படையிலும், பணியில் சேர்ந்த தேதி ஒரே மாதிரியாக, இருந்தால் பிறந்த தேதி அடிப்படையிலும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
3. பின்னர் மாவட்டத்தில் பாடவாரியாக காலிப்பணியிடங்களுக்கு ஏற்றார்போல் பட்டியலில் இளையோர் தனியே பிரிக்கபடுகிறது.
4. அவ்வாறு பிரிக்கப்பட்ட இளையோர் பட்டியலிலிருந்து முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் பணி சேர்த்து இருந்தால் பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
5. மூத்தோர் முதல் இளையோர் வரை பாட வாரியாக கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நிரவல் மூலம் புதிய பள்ளிக்கு பணிக்கு மாறுதல் ஆணை வழங்கப்படும்.
*குறிப்பு:*
ஒரு பள்ளியில் தமிழ் 2 ஆங்கிலம் 2 கணிதம் 3 அறிவியல் 2 சமூக அறிவியல் 2 என எடுத்துக் கொள்ளவோம்.
இந்தப் பள்ளியில் கணிதம் 1, ஆங்கிலம் 1 ஆகிய பாட ஆசிரியர்கள் பணிநிரவல் செய்ய வேண்டும்.
காலிப்பணியிட எண்ணிக்கையின் அடிப்படையில் ஆங்கில பணியிடம் மட்டுமே பணி நிரவலுக்கு அழைக்கப்பட்டுள்ளார். காரணம் அவர் மாவட்ட அளவில் கணிதப் பாடத்தில் இளையோர் ஆக உள்ளார். எனவே அவருக்கு பணி நிரவல் வழங்கப்படும்.
கணித பாடத்திற்கு போதிய காலிப்பணியிடம் இல்லாததாலும், கணித பணியிடத்தில் பணிபுரிவோர் மாவட்ட முன்னுரிமை பட்டியலில் மூத்தோராக உள்ளதாலும் அவருக்கு பணிநிரவல் வழங்கப்படாது. அதனால் அவர் அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றுவார்.
தகவல் பகிர்வு
உதுமான்
திருச்சி மாவட்டம்