தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப பள்ளிகளுக்கு மாவட்ட குழு அழைப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, August 3, 2019

தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப பள்ளிகளுக்கு மாவட்ட குழு அழைப்பு

தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப பள்ளிகளுக்கு மாவட்ட குழு அழைப்பு

அனைத்து தலைமையாசிரியர்கள் / நிர்வாகிகள் கவனத்திற்கு...

 *தகுதி*

அனைத்து வகையான பள்ளி மாணவ மாணவிகள்
(Nursary, Govt, Aided, Metric, Cbse and icse schools)
( குழுவான பங்களிப்பு கிடையாது)

 *தனித்திறன்கள்*

பாட்டு, நடனம், பேச்சு, கவிதை,  மைம்ஸ், சிலம்பம் போன்ற எந்த வகையான திறன்களாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒரே மாணவர் பல்வேறு திறன்களை பெற்று இருந்தால் எந்த திறனில் சிறப்பாக உள்ளாரோ அதனை அனுப்பினால் போதுமானது.

 *விதிகள்*

ஒரு பள்ளியில் இருந்து எத்தனை மாணவர்களின் வீடியோ வேண்டுமானாலும் அனுப்பலாம்.

அனைத்து வீடியோக்களும் 2 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

வீடியோவை அலைபேசியில் எடுத்தாலும் பரவாயில்லை ஆனால் தெளிவாக இருக்க வேண்டும்.

அனுப்பும் வீடியோவில் மாணவர்கள் EMIS எண், பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், தனித்திறன் ஆகியவை வீடியோவின் முதலில் வருவது அவசியம்.

வீடியோக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 06.08.2019

வீடியோக்கள் அனுப்ப வேண்டிய What's up எண்  விழுப்புரம் மாவட்டம்
9942253501

சிறந்த பேச்சுத்திறன், தனித்துவமிக்க நடிப்பு, சிறப்பான முகபாவணை, மிகச்சிறந்த குரல் வளம், மேடை கூச்சமின்மை, சரளமான பேச்சு, சிறப்பாக கருத்துக்களை உள்வாங்கி வெளிப்படுத்தும் திறன், சரியான ஏற்ற இறக்கத்துடன் பேசுதல் ஆகிய திறமைகளை ஒருங்கே பெற்ற மாணவர்களின் விபரங்களையும் மேற்கண்ட விதிகளின்படி வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும். திறன்களை குறிப்பிடும் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் என குறிப்பிடவும்.

இதில் அனைத்து பள்ளிகளும் பங்கெடுக்க வேண்டுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Kalvi TV
DMC S
VILLUPURAM.

மற்ற மாவட்டங்கள் அந்த மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளவும்.

Post Top Ad