எஸ்எஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
எஸ்எஸ்சி சிஜிஎல் 2018 தேர்வு முடிவுகள் வரும் 20 தேதி வெளியாக உள்ள நிலையில், எஸ்எஸ்சி வரி உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) சார்பில் கடந்த ஜூன் 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஒருங்கிணைந்த பட்டபடிப்பு பிரிவுக்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்விற்கான முடிவுகள் வரும் ஆகஸ்ட் 20ம் தேதியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒருங்கிணைந்த பட்டப்பிரிவு தேர்வில் 'Tax Assistant' பணியிடத்திற்கான வயது வரம்பை எஸ்எஸ்சி தேர்வாணையம் திருத்தம் செய்துள்ளது. முன்னதாக இத்தேர்வில் பங்கேற்க வயது வரம்பு 20 முதல் 27 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.தற்போது, வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், குறைந்தபட்ச வயதை 18 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.