துணை மருத்துவ படிப்புகள் கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
மருத்துவக்கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்ட அறிவிக்கை: பி.எஸ்சி நர்சிங், பிஏஎஸ்எல்பி, பிபிடி, பி.எஸ்சி ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி கார்டியோ பல்மனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.எஸ்சி மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி,
பிஎஸ்சி டயலிசிஸ் டெக்னாலஜி, பி.எஸ்சி ஆப்பரேசன் அன்ட் அனஸ்தீசியா டெக்னாலஜி, பி.எஸ்சி கார்டியாக் டெக்னாலஜி, பி.எஸ்சி கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, பி.எஸ்சி பிசிசியன் அசிஸ்ட்டன்ட், பி.எஸ்சி ஆக்சிடென்ட் எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி, பிஎஸ்சி ரெஸ்பிரேட்டரி தெரபி, பி.ஒ.டி ஆகிய துணை மருத்துவ படிப்புகளுக்கு https://www.tnhealth.org அல்லது www.tnmedicalselection.org ஆகிய இணையதள முகவரிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 19ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம், விண்ணப்ப கையேட்டை பதிவிறக்கம் செய்யலாம்