இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை (IGNOU) மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சேர்க்கை ஆன்-லைன் மூலமாக நடத்தப்பட உள்ளது.
பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் http://onlineadmission.ignou.ac.in/admission என்ற வலைதளம் மூலமாக சேர்க்கை பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தின் மண்டல மையத்தை நேரில் தொடர்புகொள்ளலாம்.
அல்லது, 044 - 26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என பல்கலைக்கழக மண்டல மைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.