தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் வருகின்றன.
Flash News : PGTRB 2019 - View and Download Your Question and Response Sheets - TRB Published Now!
8462 தற்காலிக பணியிடங்களுக்கான Pay Authorisation order
ஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு பழைய பாடத் திட்டத்தில் பொதுத்தோ்வு
பள்ளிக் கல்வித்தரத்தில் முதலிடம் பெற்ற கேரளம் இரண்டாவது இடத்தில் தமிழகம்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தோவு இல்லை: ஆசிரியா் தோவு வாரியம்
மாணவர்களை தொழிற்சாலைகளுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்க ஏற்பாடு - செங்கோட்டையன்
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் பருவ புத்தகங்களை பெற்று புத்தக வங்கி தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
SSE - School External Evaluation Dashboard - School List 2019 - 2020 Published | பள்ளி புற மதிப்பீட்டு குழு பார்வை பள்ளிகளின் பட்டியல்.
தொடக்க பள்ளியை மேம்படுத்த கோரி 6 வயது மாணவி பொதுநல வழக்கு : அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

ஒரு மாதத்தில் தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவிப்பு
ஒரு மாதத்தில் தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவிப்பு
சென்னை:'போட்டி தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை, ஒரு மாதத்தில் வெளியிடப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழ் கலாசாரம்இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன், செயலர் நந்தகுமார் அளித்த பேட்டி:அரசு பதவிகளுக்கான, 'குரூப் - 2, குரூப் - 2 ஏ' இரண்டுக்கும், ஒரே தேர்வு முறை அமலாக உள்ளது. முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிரதான தேர்வு நடத்தப்படும்.
முன்பிருந்த, பொதுத்தமிழ் அல்லது ஆங்கில விடைத்தாளுக்கு பதில், முதல் நிலை தேர்விலும், பிரதான தேர்விலும், தமிழ் மொழி திறனை அறிந்து கொள்ளும் வகையில், அதிக கேள்விகள் இடம் பெறும். தமிழ் கலாசாரம், பண்பாடு, திருக்குறள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. புதிய தேர்வு முறையால், தமிழ் தெரியாதவர்கள், இனி, போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாது. ஏற்கனவே இருந்த, எட்டு பாடங்களுடன், தமிழ் கலாசாரம் மற்றும் தமிழக நிர்வாக முறை குறித்த, இரண்டு புதிய பாடங்களும், பிரதான தேர்வில் சேர்க்கப் பட்டுள்ளன. புதிய தேர்வு முறை, கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
மனப்பாட முறைக்கு பதில், புரிந்து படிப்பவர்களுக்கு ஊக்கத்தை தரும்.வல்லுனர் குழுகடந்த ஆண்டில், போட்டி தேர்வுகள் வழியாக, 17 ஆயிரத்து, 500 பேருக்கு, அரசு வேலை கிடைத்துள்ளது. தேர்வுகளில், தவறாக கேட்கப்படும் கேள்விகளுக்கு, வல்லுனர் குழு அமைத்து, ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும். தேர்வுகளுக்கான ஆண்டு கால அட்டவணை, ஒரு மாதத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஆசிரியர்களைப் புரிந்து கொள்வோம்!!
ஆசிரியர்களைப் புரிந்து கொள்வோம்!!
*ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள்.* அவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்துவதை ஒரு பார்வையாளராக கவனித்தால், அதன் மதிப்பு உங்களுக்குப் புரியாது. *‘‘அவர்களுக்குப் பாடம் எடுங்கள்’’* என்று உங்களை வகுப்புக்குள் அனுப்பி வைத்தால், நீங்கள் போய் பாடமெடுத்தால் மட்டுமே, ஆசிரியரின் கடின உழைப்பு புரியும்.40 மாணவர்களையும் முதலில் அமைதியாக இருக்க வைக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் அதட்ட வேண்டும், கொஞ்சம் அன்பாகப் பேச வேண்டும், கொஞ்சம் கெஞ்ச வேண்டும். ‘‘பிரின்சிபல் (தலைமை ஆசிரியர்) கிட்ட சொல்லிருவேன்’’ என்று மிரட்ட வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை அதிகமாகச் செய்தாலும் பிரச்சனை வந்து விடும்.
இப்போதெல்லாம் பலரும் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்வதால், குழந்தைகள்மீது அதிக பாசம் வைக்கிறார்கள். பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தையின் முகம் லேசாக வாடினாலே பள்ளிக்குத் தேடி வந்து விடுகிறார்கள்.
அதனால் ஆசிரியர்களால் அதிகம் அதட்டவும் முடியாது. அப்படி அதட்டாமல் அன்பாகச் சொன்னால் மாணவர்களை உடனே கட்டுப்படுத்தவும் முடியாது. வகுப்பின் நேரமே 40 நிமிடங்கள்தான். அங்கே அன்பாகப் பேசி கட்டுப்படுத்த 15 நிமிடங்கள் எடுக்க முடியாது. பாடம் எடுத்து, அது ஒவ்வொரு மாணவருக்கும் புரிந்திருக்கிறதா?என்று கவனிக்க வேண்டும்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் என்றால், அதை மாணவர்கள் ஒழுங்காக நோட்டில் எழுதுகிறார்களா என்று சோதிக்க வேண்டும்.
இப்படி 40 நிமிடங்களில் ஓர் ஆசிரியர் பெற்றோரை, மாணவரை, தலைமையாசிரியரை, கல்வித்துறை அதிகாரிகளை என பலரையும் திருப்தி செய்ய வேண்டும். இவ்வளவையும் செய்து பாடத் திட்டத்தையும் சரியான காலத்தில் முடிக்க வேண்டும்.
ஆசிரியர் தொழில் என்பது முழுக்க முழுக்க மனித மனங்களோடு உறவாடுவதுதான்.
ஒரு பொறியாளர் மாதிரி வேலையை செய்துவிட்டுப் போக முடியாது. ஆசிரியர்களின் வேலையே பேசுவதுதான்.
ஆசிரியர்கள் வகுப்பில் பாடத்தை ஒருமுறைதான் சொல்லிக் கொடுக்க முடியும். அதைத் திரும்பத் திரும்ப வீட்டில் படிக்க வைப்பது பெற்றோர்கள் கடமையே.
இப்படி வகுப்பையும் கட்டுப்படுத்தி, ஒழுக்கத்தையும் போதித்து, கல்வியையும் போதிக்கும் ஆசிரியர்களை சரியாக ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொள்ளும் போதுதான் அங்கே மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
Pgtrb 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதாமல் திரும்பி சென்ற விண்ணப்பதாரர்கள்!
Pgtrb 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதாமல் திரும்பி சென்ற விண்ணப்பதாரர்கள்!
சென்னை அடுத்த ஆவடியில் சர்வர் கோளாறு காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத முடியாமல் ஏராளமான தேர்வர்கள் திரும்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு, ஆன்லைன் மூலமாக கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் உள்ள ஆலிம் பொறியியல் கல்லூரியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு காலை மற்றும் மதியம் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்ததுஇந்த நிலையி சர்வர் கோளாறு காரணமாக காலையில் தேர்வு எழுத வந்தவர்களுக்கு வினாத்தாள் கொடுக்காமல் மதியம் வரை காக்க வைத்து அதன்பின் காலையில் தேர்வு எழுத வந்தவர்களுக்கு மதியம் ட்தான் தேர்வு எழுத தொடங்கினர். இதனால் மதியம் தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வறைக்கு வெளியே நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து மனஉளைச்சல் அடைந்த பலர் தேர்வு எழுதாமலையே திரும்பிச் சென்றனர்.
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? Tnpsc முக்கிய தகவல்!!
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது? Tnpsc முக்கிய தகவல்!!
இந்தாண்டு மொத்தம் 6,491 காலிப் பணியிடங்களுக்கு (TNPSC Group 4 Results)குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தேர்வு முடிவுகள் (Group 4 Result) எப்போது வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
மொத்தம் 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் கிராம நிர்வாக அதிகாரி (VAO) இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவையாளர், வரைபடம் வரைபவர், தட்டச்சர், ஸ்டெனோ தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
5% அகவிலைப் படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
5% அகவிலைப் படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்வு: விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
(இந்த வாரம் 5% அகவிலைப் படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு)
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மீண்டும் முடக்கம்! - அக்டோபர் மாதம் நடைபெறுவதில் சிக்கல்
Emis - அனைத்து வகையிலான பள்ளி ஆசிரியர்களும் தங்களது புகைப்படம் சரியாக இருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொள்ளவும்.
Emis - அனைத்து வகையிலான பள்ளி ஆசிரியர்களும் தங்களது புகைப்படம் சரியாக இருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொள்ளவும்.
Teachers profile part 1ல் subjects taught பகுதியில் ஆறு பாடங்களை தேர்வு செய்து TIME TABLE உருவாக்குவதில் இருந்து வந்த தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது.
TEACHERS PROFILE ல் பல்வேறு ஆசிரியர்களின் புகைப்படங்கள் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்தகைய தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் சிலரின் மாறிய புகைப்படம் சரிசெய்யப்பட்டும், சிலரின் புகைப்படங்கள் நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல் பெறப்பட்டுள்ளது. புகைப்படம் இல்லாத ஆசிரியர்கள்&ஆசிரியரல்லாத அலுவலகப் பணியாளர்கள்,ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புகைப்படம் பதிவேற்றம் செய்யவும் . ஆகையால் அனைத்து வகையிலான பள்ளி ஆசிரியர்களும் தங்களது புகைப்படம் சரியாக இருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொள்ளவும்.
Trust Exam 2019 - Question Paper with Answer Key
Trust Exam 2019 - Question Paper with Answer Key
Trust Exam 2019 - Question Paper | Mrs. Geetha - Tamil Medium Download Here
Trust Exam 2019 - Answer Key | Mr. Venkatachalam - Tamil Medium Download Here
தமிழ் தெரிந்தால் தான் இனி தேர்ச்சி பெற முடியும்: டிஎன்பிஎஸ்சி செயலர் பேட்டி
தமிழ் தெரிந்தால் தான் இனி தேர்ச்சி பெற முடியும்: டிஎன்பிஎஸ்சி செயலர் பேட்டி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய 2 பிரிவு பணியிடங்களுக்கும் இனி ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வில் பொது தமிழ் நீக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார், செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
முதன்மைத்தேர்வில் மொழிப்பாடம் எழுத்துத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதனால்தான் முதல் நிலைத்தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது. குரூப்-2 முதன்மை பாடம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் குரூப் 2 தேர்வில் இனி கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள்.
குரூப்-2 பழைய பாடத்திட்டத்தின்படி தமிழே தெரியாத ஒருவர் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்லமுடியும். ஆனால், புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஆள்மாறாட்டம் இதுவரை நடந்தது இல்லை, இனி வரும் நாட்களிலும் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
தமிழக அரசு பள்ளி மாணவிக்கு வந்த ஐ.நா அழைப்பு..! வாழ்த்துக்கள் குவிகிறது..!
தமிழக அரசு பள்ளி மாணவிக்கு வந்த ஐ.நா அழைப்பு..! வாழ்த்துக்கள் குவிகிறது..!
மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமலதா. இவர் அந்த ஊரில் இருக்கும் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார். பள்ளியில் எட்டாம் வைப்பு படிக்கும் போது இவர் மனித உரிமை கல்வியைப் பயின்றுள்ளார். தற்போது கல்லூரியில் பயின்று வரும் நிலையில் மாணவி பிரேமலதாவிற்கு ஐநா மனித உரிமை ஆணையம் சார்பாக உரை நிகழ்த்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் பொதுக்கூட்டத்தில் பிரேமலதா கலந்துகொள்ள அழைப்பு வந்திருக்கிறது.
அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் பொதுக்கூட்டத்தில் பிரேமலதா கலந்துகொள்ள அழைப்பு வந்திருக்கிறது.
அந்த கூட்டத்தில் 'மனித உரிமை கல்வி மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு' என்கிற தலைப்பில் மாணவி பிரேமலதா உரையாற்ற இருக்கிறார்.
அரசுப்பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவி பிரேமலதாவுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் உரையாற்ற அழைப்பு விடுத்திருப்பதை தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் மாணவிக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது. இதனால் மாணவி பிரேமலதா உற்சாகம் அடைந்து உள்ளார்.
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் மைக்ரோசிப்பில் உங்கள் பெயர் இடம் பெற வேண்டுமா?
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் மைக்ரோசிப்பில் உங்கள் பெயர் இடம் பெற வேண்டுமா?
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் மைக்ரோசிப்பில் பெயர் பொறிக்க, உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை ஆன்லைனில் சமர்ப்பிக்னுமாறு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ளது. இந்த மைக்ரோசிப் செவ்வாய் கிரகம் 2020 ரோவரில் வைக்கப்படும். பெயர்களை கீழகண்ட வலைப்பக்கத்தில் செப்டம்பர் 30-க்கு முன் சமர்ப்பிக்கலாம்.
https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020
சமர்ப்பிக்கப்பட்ட பெயர்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள மைக்ரோ டிவைசஸ் ஆய்வகம் எலக்ட்ரான் கதிரை பயன்படுத்தி சிலிக்கான் சிப்பில் பெயர்களைக் பதிவு செய்யும். இதுவரை 98 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் பெயர்களை சமர்ப்பித்துள்ளனர். ரோவர் 2020 ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, இது பிப்ரவரி 2021க்குள் செவ்வாய் கிரகத்தைத் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காந்தி பிறந்த நாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
காந்தி பிறந்த நாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
காந்தி ஜயந்தியன்று பள்ளி மாணவர்கள் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி அனைத்து வகை பள்ளி மாணவர்கள் மூலமும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காமல் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் பொருள்களை சேகரித்தபடி மாணவர்கள் வீதிகளில் ஓடுவதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதற்குத் தேவையான சாதனங்களை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், காந்தி ஜயந்தி நாளில் மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் நிகழ்வை விடியோ பதிவு செய்து துறை இயக்குநரகத்துக்கு அன்று மாலையே அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன..?
குரூப் 2 தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன..?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளின் நடைமுறை மற்றும் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளன.
சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட நேர்காணல் பணியிடங்கள் முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று கட்ட தேர்வுகளைக் கொண்ட குரூப் 2 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டன. பல்வேறு துறைகளின் உதவியாளர் உள்ளிட்ட நேர்காணல் அல்லாத பணியிடங்கள் ஒரு எழுத்துத் தேர்வைக் கொண்ட குரூப் 2ஏ தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், புதிய முறைப்படி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ என இரு தேர்வுகள் அல்லாமல் ஒரே தேர்வாக நடத்தப்படும்.
இதுவரை ஒரு தேர்வு மட்டும் இருந்த நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கு, பிரதான தேர்வையும் சேர்த்து இருநிலை தேர்வுகளை எழுத வேண்டும்.
குரூப் 2 தேர்வின் முதல்நிலை தேர்வில் இதுவரை 100 பொது அறிவு வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து எழுதும் 100 வினாக்களும் கேட்கப்பட்டன. அந்த முறை மாற்றப்பட்டு தமிழக அரசியல் வரலாறு, பாரம்பரியம் உள்ளிட்ட பாடப்பகுதிகளுடன் கூடிய 175 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி வினாக்களும் இடம்பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. பொது அறிவு சார்ந்த வினாக்கள் முதல்நிலைத் தேர்வில் அதிகரிக்கப்பட்டு மொழி சார்ந்த வினாக்கள் பிரதானத் தேர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.
திறன்வாய்ந்த பணியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதனால் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
நீண்ட நாள் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை -கல்வித்துறை உத்தரவு
நீண்ட நாள் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை -கல்வித்துறை உத்தரவு
ஆசிரியர்களின் நியமனம் , பணிநிரவல் தொடர்பான அரசாணை எண் :165 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு
ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு (தொழிற்கல்வி, பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு) கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பம் .
ஆம்பூரில் தகுதியில்லாமல் டெட் தேர்வெழுதி ஆசிரியையாக சேர்ந்த 7 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
ஆம்பூரில் தகுதியில்லாமல் டெட் தேர்வெழுதி ஆசிரியையாக சேர்ந்த 7 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
வேலூர் ஆம்பூரில் தகுதியில்லாமல் டெட் தேர்வெழுதி ஆசிரியையாக சேர்ந்த புகாரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியை, மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட 7 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கல்வி அலுவலர் சாம்பசிவம், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்பூரில் உள்ள அரசு உதவிபெறும் இந்து மேல்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியை பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது.
Tet-1500 நிபந்தனை ஆசிரியர்கள் உண்மை நிலை - காலைக்கதிர் தினசரி
காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளான 02-10-2019 அன்று நெகிழி குப்பைகளை எடுத்துக்கொண்டு ஓடுதல் (plogging run) என்ற நிகழ்ச்சியை அனைத்து பள்ளிகளிலும் நடைபெற SPD உத்தரவு
மாணவர்களுக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்குவதை நிறுத்தி வைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.
மாணவர்களுக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்குவதை நிறுத்தி வைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 2018ல், பிளஸ் 2 படித்தவர்கள், தற்போது பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 படிப்பவர்கள் என, மூன்று தரப்பினருக்கும், இலவச லேப்டாப் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. தமிழக மின்னணு நிறுவனமான, 'எல்காட்'டி லிருந்து நேரடியாக, பள்ளி களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன.பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே மாணவர்களுக்கு, லேப்டாப் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளன.
இந்நிலையில், லேப்டாப் வினியோகத்தை நிறுத்தி வைக்கும்படி, பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை, திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாக காரணங்களால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், உயர் அதிகாரிகள் மீண்டும் உத்தரவிட்டதும், லேப்டாப் வழங்கப்படும் என, மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.