பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டம் - டெண்டர் அறிவிப்பு !
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை பஞ்சாப் அரசு காங்கிரஸ் மாநிலத்தில் அமல்படுத்தப் படவுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் மொபைல் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்தவுடன் இப்போது அந்த திட்டத்தை நிறைவேற்றும் பணிகளை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
இதன்படி நேற்று கூடிய அமைச்சரவையில் இந்த திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் டிசம்பரில் முதற்கட்டமாக, இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், அரசு பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் ஸ்மார்ட் போன் இல்லாத, மாணவ,மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment