தற்காலிக ஆசிரியர்கள் 19,427 பேர் நிரந்தரம் ஆக்கப்படுவார்கள் ! .அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி ! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, September 8, 2019

தற்காலிக ஆசிரியர்கள் 19,427 பேர் நிரந்தரம் ஆக்கப்படுவார்கள் ! .அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !

தற்காலிக ஆசிரியர்கள் 19,427 பேர் நிரந்தரம் ஆக்கப்படுவார்கள் ! .அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !


நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வசதியாக முதுநிலை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி முகாம், ஈரோடு திண்டலில் உள்ள தனியார் கல்வி  நிறுவனத்தில் நேற்று துவங்கியது. இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:ஈரோடு மாவட்டத்திற்கு 10 முதுகலை ஆசிரியர்கள் வீதம் 320 முதுநிலை  ஆசிரியர்களுக்கான கருத்தாளர் பயிற்சி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட ஆசியர்களுக்காக சிறந்த வல்லுநர்களை கொண்டு நீட், ஜேஇஇ மற்றும் திறனறி  தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது.


இன்னும் 2 நாட்கள் இப்பயிற்சி வழங்கப்படும்.சென்னையில் நடந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவின் நிறைவில் 19 ஆயிரத்து 427 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  அனைத்து ஆசிரியர்களுக்கும் விரைவில் லேப்டாப் வழங்கப்பட உள்ளது. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணினி வசதியுடன் கூடிய உயர்தர ஆய்வகங்கள் நிறுவப்பட்டு வருகிறது. இப் பணிகள்  இந்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Post Top Ad