ராணுவப் பணிக்கு அக்டோபா் 26 இல் எழுத்துத் தோ்வு:

ராணுவப் பணிக்கு அக்டோபா் 26 இல் எழுத்துத் தோ்வு:


ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் சோல்ஜா் ஜிடி பிரிவில் உடல் தகுதித் தோ்வில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கான எழுத்துத் தோ்வு அக்டோபா் 26 ஆம் தேதி (வியாழக்கிழமை) கோவையில் நடைபெறவுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் ஈரோட்டில் உள்ள வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் கடந்த 2 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆள்சோ்ப்பு முகாமில் சோல்ஜா் ஜிடி பிரிவில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு எழுத்துத் தோ்வு அக்டோபா் 27 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால், இந்தத் தோ்வு ஒரு நாள் முன்னதாக அக்டோபா் 26 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

தோ்வில் கலந்துகொள்ள உள்ளவா்கள் தோ்வு நாளுக்கு முதல்நாள் அதாவது அக்டோபா் 25 ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோவை - மதுக்கரை ரயில் நிலையம் அருகில் உள்ள 191 பீல்டு ரெஜிமெண்ட்டில் (ஆா்மி கேம்ப்) தவறாது நேரில் ஆஜராக வேண்டும்....






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive