ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா?  - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, September 11, 2019

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா? 



ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா? 

பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ-யில், ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ் என்ற பிரிவின் கீழ் டெவலபர், சிஸ்டம் / சர்வீஸ் அட்மினிஸ்ரேடர், டேடாபேஸ் அட்மினிஸ்ரேடர், ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணிகள்:
ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ் 

காலிப்பணியிடங்கள்:
டெவலபர் - 181
சிஸ்டம் / சர்வீஸ் அட்மினிஸ்ரேடர் - 47
டேடாபேஸ் அட்மினிஸ்ரேடர் - 29
ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் - 61
உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு என மொத்தம் = 477 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 06.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 25.09.2019
தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: 20.10.2019

வயது உச்சவரம்பு: 
30.06.2019 அன்றுக்குள், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 முதல் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.


குறிப்பு:
பணிகளை பொருத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு. 

ஊதியம்:
தொடக்க ஊதியமாக ரூ.23,700 முதல் அதிகபட்சமாக ரூ.59,170 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

குறிப்பு:
பணிகளை பொருத்து ஊதியங்களில் மாற்றங்கள் உண்டு. 

தேர்வுக்கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.125
பொது / EWS / OBC பிரிவினர் - ரூ.750

குறிப்பு:
செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற இயலாது.
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.

கல்வித்தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், பி.இ (கம்யூட்டர் சயின்ஸ்) / பி.டெக் (ஐ.டி) / எம்.பி.ஏ / எம்.சி.ஏ / எம்.எஸ்.சி (ஐ.டி) போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்புகளில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் அத்துறை சார்ந்த முன் அனுபவம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

குறிப்பு:
பணிகளுக்கு தகுந்தாற்போல, குறிப்பிட்ட பணி சார்ந்த முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://www.sbi.co.in/careers/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/050919-Advertisement%20SCO-2019-20-11.pdf மற்றும் https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/050919-ADVT%20CRPD-SCO-2019-20--13.pdf- என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.

Post Top Ad