நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்! மஹாராஷ்டிராவில் தேர்வெழுதி தேனியில் படித்து வரும் தமிழக மாணவன்!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்! மஹாராஷ்டிராவில் தேர்வெழுதி தேனியில் படித்து வரும் தமிழக மாணவன்!


இந்தியாவில் மருத்துவப்படிப்பில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வு அவசியமான ஒன்றாகும். இந்த நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டு அதன் விவரங்கள் தற்போது சுகாதாரத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 2018 மே மாதம் நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. அப்போது புகாருக்கு உட்பட்ட மாணவன் மஹாராஷ்டிரா, மும்பையில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்த மாணவர் ஏற்கனவே இருமுறை சென்னையில் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாணவர் தற்போது தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்த மாணவரின் நீட் நுழைவு சீட்டு ( ஹால் டிக்கெட் ) புகைப்படமும், தற்போது தேனி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக எடுக்கப்பட்ட புகைப்படமும், வெவ்வேறாக இருந்ததால், கல்லூரி நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவர, அவர் சம்பத்தப்பட்ட மாணவனின் விவரத்தையும், தனது புகாரையும் சுகராதரத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளார்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive