வனக்காவலர் தேர்வுக்கான, ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது, தற்காலிகமாக நிறுத்தம்.

வனக்காவலர் தேர்வுக்கான, ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது, தற்காலிகமாக நிறுத்தம்.


வனக்காவலர் தேர்வுக்கான, ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது, தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது. இது தொடர்பாக, வனச்சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வில் பங்கேற்க, 1.67 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான ஆன்லைன் தேர்வு, அக்டோபர், 4ல் துவங்க உள்ளது.இதற்கு, விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான, ஹால் டிக்கெட்டை, இம்மாதம், 27ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப் பட்டிருந்தது.

தற்போது,நிர்வாக காரணங்களால், ஹால்டிக்கெட் பதிவிறக்க பணிகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளன. வரும், 30ம் தேதி முதல், மீண்டும், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.








0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive