எக்செல் ஃபைலை யாரும் ஓபன் பண்ணாதவாறு லாக் செய்வது எப்படி?
மைக்ரோசாப்ட் ஆபீஸில் உள்ள எக்செல் என்பதை பயன்படுத்தாதவர்கள் அனேகமாக இருக்க முடியாது. அனைத்து அலுவலகங்களிலும் எக்செல் பயன்பாடு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் எக்செல்-இல் பதிவு செய்யப்படும் முக்கிய விபரங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியம்.
அந்த வகையில் எக்செல் ஃபைலை நம்மை தவிர யாரும் பார்க்க இயலாதவாறு லாக் செய்வது என்பதை இப்போது பார்ப்போம். இது மிகவு எளிமையான வழிதான்.
முதலில் எக்செல் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள். பின்பு alt + f ஐ கிளிக் செய்யுங்கள். பின்பு இன்ஃபோ என்பதை கிளிக் செய்யுங்கள். பின்னர் வலது பக்கம் புரொடக்ட் வொர்க்புக் என்ற ஆப்சன் இருக்கும். அதில் என்கிரிப்ட் வித் பாஸ்வேர்ட் என்பதை கிளிக் செய்யுங்கள் தற்போது பாஸ்வேர்டு கொடுத்துவிட்டு பின்னர் ctrl + S ஐ கிளிக் செய்யுங்கள். இது எக்செல் 2019 வெர்ஷனுக்கு உரிய வழி ஆகும். ஒரு வேலை நீங்கள் எக்செல் 2007ஐ உபயோகிப்பவராக இருந்தால் alt + f ஐ கிளிக் செய்யுங்கள்.
அதில் பிரிப்பேர் என்ற ஒரு ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்தால் அதில் என்கிரிப்ட் டாக்குமெண்ட் என்ற ஒரு பொத்தான் இருக்கும். அதை கிளிக் செய்து பாஸ்வேர்டு கொடுங்கள் பின்பு ctrl + S ஐ பிரஸ் செய்து விடுங்கள். தற்போது உங்களுடைய எக்செல் ஃபைல் லோக் ஆகி விடும்.
0 Comments:
Post a Comment