பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் பருவ புத்தகங்களை பெற்று புத்தக வங்கி தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு முடிவுறும் நிலையில் முதல் பருவத்திற்குரிய அனைத்து வகுப்புகளுக்குரிய அனைத்து பாடப்புத்தகங்களையும் பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ள பாட புத்தகங்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மாணவர்களிடமிருந்து புத்தகங்களை பள்ளியின் கடைசி வேலை நாளான்று பெற்று புத்தக வங்கியில் வகுப்பு மற்றும் பாட வாரியாக தொகுத்து பாதுகாத்து வைத்திடுமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.