மத்திய அரசுப் பணிக்கான இரண்டாம் நிலைத் தேர்வு: இன்று நடக்கிறது
மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான இரண்டாம் நிலைத் தேர்வு, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான (நிலை 1) தேர்வு, கடந்த 2018 -ஆம் ஆண்டு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாம் நிலைத் தேர்வை கணினி வாயிலாக நடத்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் திட்டமிட்டுள்ளது. இதன்படி இரண்டாம் நிலைத் தேர்வு, வெள்ளி (செப்.13) மற்றும் சனிக்கிழமைகளில் (செப். 14) தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை, ஆந்திரத்தில் கர்நூல், திருப்பதி, விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம், தெலங்கானாவில் ஹைதராபாத் உள்ளிட்ட 8 நகரங்களில் 18 மையங்களில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை தென்மண்டலத்தில் 13,399 பேர் எழுதுகின்றனர். கணினி வாயிலாக நடைபெறும் இந்தத் தேர்வு, செப்.13 இல் (தாள்-1, 2) மற்றும் செப்.14 இல் (தாள்-3,4) முதல் அமர்வு, காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், இரண்டாவது அமர்வு பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தேர்வு குறித்த விவரங்களை www.sscsr.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வர்கள், தடை செய்யப்பட்ட பொருள்களான கைக்கடிகாரம், புத்தகங்கள், துண்டு காகிதங்கள், செல்போன், ஸ்கேனர், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்களை தேர்வுக் கூடத்துக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு, 3 முதல் 7 ஆண்டுகளுக்குத் தேர்வெழுத தடை விதிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044-28251139 மற்றும் 9445195946 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தேர்வாணையத்தின் தென்மண்டல துணைச் செயலாளர் எஸ்.ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment