மாணவர்களுக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்குவதை நிறுத்தி வைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.

மாணவர்களுக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்குவதை நிறுத்தி வைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 2018ல், பிளஸ் 2 படித்தவர்கள், தற்போது பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 படிப்பவர்கள் என, மூன்று தரப்பினருக்கும், இலவச லேப்டாப் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. தமிழக மின்னணு நிறுவனமான, 'எல்காட்'டி லிருந்து நேரடியாக, பள்ளி களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன.பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே மாணவர்களுக்கு, லேப்டாப் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளன.

இந்நிலையில், லேப்டாப் வினியோகத்தை நிறுத்தி வைக்கும்படி, பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை, திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாக காரணங்களால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், உயர் அதிகாரிகள் மீண்டும் உத்தரவிட்டதும், லேப்டாப் வழங்கப்படும் என, மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive