முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான மையம் ஒதுக்கியதில் குளறுபடி

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான மையம் ஒதுக்கியதில் குளறுபடி


சென்னை: தேர்வு மையம் ஒதுக்கியதில் குளறுபடி... முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு மையம் ஒதுக்கியதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், விருப்ப மாவட்டங்களைத் தவிர்த்து, தொலைதூர இடங்களில் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப 17 பாடங்களுக்கு ஆன்லைன் தேர்வு இம்மாதம் 27 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை காலை மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது.


இதற்கு 8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், சுமார் 1 லட்சம் பேருக்கு, தேர்வு மையங்கள் தொலைதூரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருவள்ளூரிலும், சென்னை, காஞ்சிபுரம் தேர்வர்களுக்கு நெல்லை, ஈரோடு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆன்லைன் தேர்வுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 24-ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த குளறுபடி அதிர்ச்சியளிப்பதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive